Webdunia - Bharat's app for daily news and videos

Install App

செல்போன் உற்பத்தியில் இந்தியா 2வது இடம்..! பிரதமர் மோடி பெருமிதம்..!!

Senthil Velan
புதன், 13 மார்ச் 2024 (16:12 IST)
உலக அளவில் செல்போன் உற்பத்தியில் இந்தியா 2வது இடத்தில் உள்ளதாக பிரதமர் மோடி பெருமிதம் தெரிவித்துள்ளார்.
 
குஜராத்தில் இரண்டு மற்றும் அசாமில் ஒன்று உட்பட சுமார் ரூ.1.25 லட்சம் கோடி மதிப்பில் 3 செமி கண்டெக்டர் ஆலைகளுக்கு வீடியோ கான்பரன்சிங் மூலம் இன்று பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார். 
 
பின்னர் பேசிய பிரதமர் மோடி,  உலக அளவில் செல்போன் உற்பத்தியில் இந்தியா 2வது இடத்தில் உள்ளதாக தெரிவித்தார்.  இந்தியா ஏ.ஐ., தொழில் நுட்பத்தை விரிவுப்படுத்தி வருகிறது என்று அவர் கூறினார்.
 
3 செமிகண்டெக்டர் ஆலைகள் மூலம் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு அதிகரிக்கும் என்றும் தயாரிப்பு மையமாக இந்தியா உருவெடுக்கும் என்றும் பிரதமர் கூறினார்.
 
பல்வேறு காரணங்களால், முதல் மற்றும் இரண்டாவது தொழில் புரட்சியின் போது இந்தியா பின்தங்கியது என்றும் தற்போது இந்தியா முன்னோடியாக உள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.

ALSO READ: வங்கி கணக்குகள் முடக்கம்..! காங்கிரஸ் மனு தள்ளுபடி.!!
 
பிரகாசமான எதிர்காலத்தை நோக்கி ஒரு படி முன்னேறி வருகிறோம் என தெரிவித்த பிரதமர்,  இந்தியா ஏற்கனவே விண்வெளி, அணுசக்தி மற்றும் டிஜிட்டல் துறையில் சிறப்பாக செயல்பட்டு வருகிறது என்று கூறினார்.  செமிகண்டெக்டர் துறையில் இந்தியாவும் உலக வல்லரசாக மாறும் நாள் வெகு தொலைவில் இல்லை என்று பிரதமர் மோடி தெரிவித்தார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நாம் தமிழர் கட்சியில் இருந்து யாரும் விலகவில்லை.. அவர்கள் எல்லாம் ஸ்லீப்பர் செல்: சீமான்

சங்கி என்றால் நண்பன் அல்லது தோழன் என்று அர்த்தம்: சீமான் விளக்கம்

கென்யாவை அடுத்து இலங்கையிலும் அதானி ஒப்பந்தம் ரத்து செய்யப்படுகிறதா?

22ஆம் தேதி ஆகியும் இன்னும் ரேசன் கடையில் துவரம் பருப்பு இல்லை: ராமதாஸ் கண்டனம்.!

அடுத்த கட்டுரையில்
Show comments