Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தேவை ஏற்பட்டால் எல்லை தாண்டுவோம்! பாகிஸ்தானுக்கு அமைச்சர் ராஜ்நாத் சிங் எச்சரிக்கை

Webdunia
சனி, 17 மார்ச் 2018 (21:01 IST)
காஷ்மீரை இந்தியாவிடம் இருந்து பிரிக்க முடியாது, காஷ்மீர் இன்றும் இந்தியாவுக்குத்தான், எதிர்காலத்திலும் இந்தியாவிற்குத்தான். காஷ்மீரை காப்பாற்ற தேவைப்பட்டால் இந்திய ராணுவம் எல்லை தாண்டும் என்று உள்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் பாகிஸ்தானுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இன்று டெல்லியில் நடைபெற்ற ரைசிங் மாநாட்டில் கலந்து கொண்ட உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் பேசியதாவது: காஷ்மீர் முன்பும் சரி, இப்போதும் சரி, எதிர்காலத்திலும் சரி, இந்தியாவினுடையதுதான். அதனை இந்தியாவிடம் இருந்து எந்த சக்தியாலும் பிரிக்க முடியாது

நாட்டைப் பாதுகாப்பதில் இந்திய ராணுவத்துக்கு இருக்கும் பொறுப்புணர்ச்சியை பாராட்டுகிறேன்.  நாட்டுக்குள் மட்டுமல்ல, தேவை ஏற்படின், நாட்டைக் காக்க நாட்டின் எல்லையையும் தாண்டுவோம்.

பயங்கரவாதத்துக்கு உதவுவதை நிறுத்தினால் மட்டுமே  பாகிஸ்தானுடன் நல்லுறவை ஏற்படுத்திக் கொள்ள இந்தியா விரும்பும். இப்போது அமெரிக்கா உள்பட பல நாடுகள் பாகிஸ்தானை கண்டிக்க ஆரம்பித்துவிட்டன. பாகிஸ்தானுக்கு தற்போது என்னவானது என்று தெரியவில்லை. அந்நாட்டுடன் நட்பு பாராட்டவே நாங்கள் விரும்புகிறோம். ஆனால் எங்கள் நட்பை ஏற்க பாகிஸ்தான் விரும்பவில்லை

இவ்வாறு ராஜ்நாத்சிங் கூறினார்

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

எடப்பாடி பழனிசாமியை முதல்வராக்குவது பா.ஜ.க.வின் கடமை” - நெல்லையில் அண்ணாமலை உரை

அமித்ஷா முன்னிலையில் பாஜகவுக்கு தாவிய திமுக பிரபலம்! - தொண்டர்கள் அதிர்ச்சி!

அங்கிள் என கூறிய விஜய்.. அண்ணாச்சி என கூறிய நயினார் நாகேந்திரன்.. திமுகவினர் ஆத்திரம்..!

உதயநிதி முதல்வராகவும் முடியாது.. ராகுல் காந்தி பிரதமராகவும் முடியாது: அமித்ஷா

கல்வி உதவித்தொகை என்ற பெயரில் புதிய மோசடி: UPI மூலம் பணத்தை இழந்த மாணவர்கள்

அடுத்த கட்டுரையில்
Show comments