Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கொரோனா மருந்தை பயன்படுத்தி ஆக.15 முதல் சிகிச்சை சாத்தியமா?

Webdunia
வெள்ளி, 3 ஜூலை 2020 (10:00 IST)
கொரோனா மருந்தை பயன்படுத்தி ஆக.15 முதல் சிகிச்சை துவங்குவதற்கான சோதனை ஜூலை 7 முதல் துவங்கப்பட உள்ளது. 
 
இந்தியாவில் ஒரே நாளில் 21 அயிரத்திற்கும் மேற்பட்டோர்ப் பாதிக்கப்பட்ட நிலையில் கொரோனா பாதிக்கப்பட்டவர்கள் மொத்த எண்ணிக்கை 6,25,544 ஆக உயர்ந்துள்ளது. கொரோனாவால் பலியானவர்கள் எண்ணிக்கை 18,213 ஆக உயர்ந்துள்ளது. அதேசமயம் கொரோனா பாதிப்புடன் அனுமதிக்கப்பட்டு குணமடைந்தோர் எண்ணிக்கை 3,79,892 ஆக உயர்ந்துள்ளது.
 
இந்நிலையில் கொரோனாவுக்கு மருந்து தயாரிக்க உலக நாடுகள் பல முயற்சிகளை முன்னெடுத்து வருகின்றன. அந்த வகையில் இந்தியாவும்  covaxin TM என்ற மருந்தை உருவாக்கியுள்ளது. இதனை பாரத் பயோடெக் நிறுவனம் உருவாக்கியது. இந்த மருந்தை மனிதர்கள் மீது இந்த மருந்தை அடுத்த மாதம் சோதனை அடிப்படையில் பயன்படுத்த DCGI ஒப்புதல் அளித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 
 
இதனையடுத்து பாரத் பயோடெக் நிறுவனத்துடன் இணைந்து BBV152 என்ற மருந்தை கண்டுபிடித்துள்ளது ஐசிஎம்ஆர். ஜூலை 7 முதல் சோதனை முயற்சியாக கொரோனா மருந்து பரிசோதிக்கப்பட உள்ளது. சோதனை முயற்சி வெற்றிபெற்றால் ஆக.15 முதல் சிகிச்சைக்கு பயன்படுத்தப்படும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

திடீரென வந்த பிரசவ வலி.. பெங்களூரு ரயில் நிலைய பிளாட்பாரத்தில் குழந்தை பெற்ற பெண்..!

8ஆம் வகுப்பு மாணவியை திருமணம் செய்த 40 வயது நபர்.. ஏற்கனவே திருமணமானவர்.. 5 பேர் கைது..!

தவெக செயலி.. ஒரே நாளில் 3 லட்சம் புதிய உறுப்பினர்கள்.. கட்சியில் குவியும் பெண்கள்..!

எடப்பாடி ஒழிக... குருமூர்த்தி ஒழிக.... அண்ணாமலை ஒழிக... ஓபிஎஸ் கூட்டத்தில் ஆதரவாளர்கள் கோஷம்..!

தேவையில்லாமல் வதந்தி கிளப்ப வேண்டாம்.. இத்துடன் விட்டுவிடுங்கள்: கவின் காதலி

அடுத்த கட்டுரையில்
Show comments