Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இந்தியா - சீனா 6வது கட்ட பேச்சுவார்த்தை அமைதியை எட்டுமா?

Webdunia
திங்கள், 21 செப்டம்பர் 2020 (09:48 IST)
இன்று இந்திய - சீன ராணுவ கமாண்டர்கள் அளவிலான ஆறாவது சுற்று பேச்சுவார்த்தை நடைபெறுகிறது.
 
சீனா – இந்தியா ராணுவங்களுக்கு இடையே லடாக் எல்லைப்பகுதியில் கடந்த மாதம் நிகழ்ந்த மோதல் சம்பவத்தை தொடர்ந்து எல்லையில் போர் பதற்றம் நிலவி வருகிறது. போரை தவிர்க்க இருநாட்டு ராணுவ அதிகாரிகளும் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டுள்ளனர்.
 
எனினும் சீனா இந்திய எல்லைக்குள் பல தூரம் ஆக்கிரமித்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது. கடந்த சில வாரங்கள் முன்பு பாங் சோ ஏரி அருகே ஊடுருவிய சீனப்படைகளை இந்திய ராணுவம் விரட்டியடித்தது.
 
இந்நிலையில் சீனா இந்தியா மீது போர் தொடுக்க திட்டமிட்டு வருவதாக அமெரிக்க ஊடகங்கள் பேசி வருகின்றன. அதேபோல சீன ஊடகம் ஒன்று தற்போது எல்லைப்பகுதியில் குளிர் அதிகரித்து வருவதால் இந்திய ராணுவத்தால் அங்கு தாக்குபிடிக்க முடியாது என்ற ரீதியில் செய்தி வெளியிட்டது.
 
இருப்பினும் இந்த எல்லை பிரச்சனையை சுமூகமாக முடிக்க நினைக்கும் இந்தியா பல கட்ட பேச்சுவார்த்தைகளை நடத்தி வருகிறது. அந்த வகையில் இன்று இந்திய - சீன ராணுவ கமாண்டர்கள் அளவிலான ஆறாவது சுற்று பேச்சுவார்த்தை நடைபெறுகிறது. இந்த பேச்சுவார்த்தை சீன கட்டுப்பாட்டில் உள்ள லடாக்கின் மோல்டோ பகுதியில் நடக்கிறது என தகவ்ல் வெளியாகியுள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஆன்லைன் சூதாட்ட வழக்கு.. 15 மாதங்களாக விசாரணைக்கு வராமல் தடுக்கும் சக்தி எது? ராமதாஸ்

சென்னைக்கு வருகிறது ரஷ்ய போர்க்கப்பல்.. கூட்டு பயிற்சி பெற திட்டம் என தகவல்..!

வாட்ஸ்ஆப் சாட் மூலம் வரி ஏய்ப்பை கண்டுபிடிக்கிறோம்: நிர்மலா சீதாராமன் தகவல்..!

வானிலை முன்னறிவிப்பிலும் இந்தி திணிப்பு.. சு வெங்கடேசன் எம்பி கண்டனம்..!

ஒரு கிலோ தக்காளி 3 ரூபாய் மட்டுமே.. பெட்டி பெட்டியாய் சாலையில் கொட்டிய விவசாயிகள்..!

அடுத்த கட்டுரையில்
Show comments