இமாச்சல பிரதேசம் மாநிலத்தில் உள்ள அதானி நிறுவனத்தின் அலுவலகத்தில் கலால் துறை திடீரென அதிரடியாக சோதனை செய்து வருவது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இமாச்சலப் பிரதேசம் மாநிலத்தில் சிம்லாவில் உள்ள அதானி வில்மர் குரூப் நிறுவனத்தில் கலால் மற்றும் வரி ஏய்ப்புத்துறை அதிகாரிகள் திடீரென சோதனை செய்து வருகின்றனர். இந்த சோதனையில் ஆவணங்கள் சரிபார்க்கப்பட்டு வருவதாகவும் ஜிஎஸ்டி வரி சரியாக செலுத்து உள்ளதா என சரிபார்க்கப்பட்டு வருவதாகவும் கூறப்படுகிறது.
இமாச்சலப் பிரதேசம் மாநிலத்தில் சமீபத்தில் நடந்த தேர்தலில் காங்கிரஸ் ஆட்சியைப் பிடித்துள்ள நிலையில் அதிரடியாக இந்த சோதனையின் நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
ஏற்கனவே அதானி நிறுவனங்களின் பங்குகள் பங்குச் சந்தையில் மிகவும் சரிந்து உள்ள நிலையில் இந்த சோதனையால்மேலும் சரியும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.