Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

4 நாள் ரெய்டு – சிக்கியது 109 கோடி !

Advertiesment
4 நாள் ரெய்டு – சிக்கியது 109 கோடி !
, திங்கள், 7 ஜனவரி 2019 (13:58 IST)
கன்னடத் திரைப்பட துறையை சேர்ந்த நடிகர் நடிகைகள் மற்றும் தயாரிப்பாளர்களிடம்  கடந்த 4 நாட்களாக வருமானவரித்துறையினர் நடத்திய ரூ.109 கோடி சிக்கியுள்ளது.

கன்னட திரைப்படத்துறையின் சூப்பர் ஸ்டார்களான ஷிவ ராஜ்குமார், புனீத் ராஜ்குமார், சுதீப் உள்ளிட்ட நடிகர்கள் வீட்டிலும் ராக்லைன் வெங்கடேஷ் உள்ளிட்டோர் வீடுகள் மற்றும் அலுவலகங்களில் கடந்த 4 நாட்களாக pஅல இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றன. இந்த  சோதனை நேற்றோடு முடிந்துள்ள நிலையில் கைப்பற்றப்பட்டுள்ள ஆவணங்கள் தொடர்பான விவரங்கள் இப்போது வெளியாகியுள்ளன.

இந்தச் சோதனையில் கணக்கில் வராத ரூ.11 கோடி சொத்துக்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகவும், ரூ.2.85 கோடிக்கு ரொக்கப்பணமும், 25.3 கிலோ தங்க நகைகளும்  மற்றும் சில முக்கியமான  ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ள்தாகவும், கைப்பற்றப்பட்டுள்ள.வற்றின் மதிப்பு மொத்தமாக ரூ.109 கோடி என்று வருமானவரித்துறையினர் தெரிவித்துள்ளனர்.

ஆனால் தனித்தனியாக யார் யார் வீட்டில் எவ்வ்ளவுக் கைப்பற்றப்பட்டுள்ளன என்ற விவரம் எதுவும் வெளியிடவில்லை.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

பெஸ்ட் செல்லிங் ஸ்மார்ட்போன் மீது அசத்தல் ஆஃபர்: ரியல்மீ யோ டேஸ் சேல்!