உத்தரப்பிரதேச மாநிலத்தில் காவல்துறைனர் உள்பட விஷச்சாராயம் குடித்த 17 பேர் பலியாகியுள்ளனர்.
உத்தரப்பிரதேச மாநிலத்தில் விஷச்சாராயம் குடித்தவர்களில் 17 பேர் பலியாகியுள்ள நிலையில் பலர் மருத்துவமனையில் கவலைக்கிடமாக சிகிச்சை பெற்று வருகின்றனர். இங்குள்ள எட்டா மாவட்டத்துக்குட்பட்ட அலிகஞ்ச் பகுதியில் அதிகபோதைக்காக விஷத்தன்மை கொண்ட சில பொருட்களை கலந்து தயாரித்து விற்கப்பட்ட சாராயத்தை வாங்கி குடித்தவர்களில் உள்ளூர் காவலர், மாவட்ட கலால் கண்காணிப்பு படையினர் உள்பட 17 பேர் நேற்று உயிரிழந்துள்ளனர். அதனால், மேலும் பலர் கண் பார்வை பாதிக்கப்பட்டும், வேறுசில பிரச்சனைகளாலாம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வருகின்றனர்.
பலியானவர்களின் குடும்பத்துக்கு தலா 2 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க உத்தரப்பிரதேச அரசு உத்தரவிட்டுள்ளது. மேலும் மாவட்டத்துக்குட்பட்ட கலால்துறை அதிகாரிகளை அதிரடியாக பதவி நீக்கம் செய்துள்ளது.