Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பெட்ரோல், டீசல் விலை உயர்வு; நாடு தழுவிய போராட்டம்! – காங்கிரஸ் அறிவிப்பு!

Webdunia
புதன், 9 ஜூன் 2021 (09:46 IST)
இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து உயர்ந்து வருவதை கண்டித்து நாடு தழுவிய போராட்டம் நடத்த உள்ளதாக காங்கிரஸ் அறிவித்துள்ளது.

இந்தியா முழுவதும் கொரோனா ஊரடங்கு உள்ளிட்டவற்றால் ஏற்கனவே மக்களின் அன்றாட வாழ்க்கை பாதித்துள்ள நிலையில், தொடர்ந்து பெட்ரோல், டீசல் விலை உயர்ந்து வருவது மேலும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. கடந்த சில மாதங்களாகவே வேகமாக உயர்ந்து வந்த பெட்ரோல், டீசல் விலை 5 மாநில தேர்தலின் போது விலையேற்றம் காணாமல் ஒரே விலையில் நீடித்து வந்தது.

தற்போது மீண்டும் விலை உயர தொடங்கியுள்ள நிலையில் பல பகுதிகளில் பெட்ரோல் விலை லிட்டர் ரூ.100 தாண்டி விற்பனையாகி வருகிறது. இதனால் மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாகவும், விலைவாசி உயர்விற்கு வழிவகுப்பதாகவும் கூறியுள்ள காங்கிரஸ், நாளை மறுநாள் ஜூன் 11 அன்று பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து நாடு தழுவிய போராட்டம் நடத்த உள்ளதாக அறிவித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இந்திய ரிசர்வ் வங்கியில் வேலைவாய்ப்பு.. சம்பளம் ரூ.2,73,500 வரை.. எப்படி விண்ணப்பிப்பது?

கால் டாக்சி ஓட்டுனர்களை கொன்ற சீரியல் கொலைகாரன்.. 24 ஆண்டுகளுக்கு பின் கைது..!

முதலமைச்சர் சொல்லியும் கல்வி கட்டணத்தை தள்ளுபடி செய்யாத பள்ளி நிர்வாகம்.. 7ஆம் வகுப்பு மாணவியின் ஐ.ஏ.எஸ் கனவு என்ன ஆகும்?

தவெக உறுப்பினர் சேர்க்கை பயிற்சி பட்டறை! அடுத்த கட்ட பாய்ச்சலில் விஜய்!

யாருமில்லா காட்டுக்குள்ள யாருக்குய்யா பாலம் கட்றீங்க? - ட்ரோல் மெட்டீரியல் ஆன உ.பி கண்ணாடி பாலம்!

அடுத்த கட்டுரையில்
Show comments