Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஸ்பா மையம் பெயரில் விபசாரம்…60 பெண்கள் உள்பட 99 பேர் கைது

Webdunia
வியாழன், 25 மே 2023 (15:28 IST)
உத்தரபிரதேச மாநிலத்தில் ஸ்பா மையம் என்ற பெயரில் விபசாரத்தில் ஈடுபட்ட 60 பெண்கள் உள்பட 99 பேரை போலீஸார் கைது செய்துள்ளனர்.

உத்தரபிரதேச மாநிலத்தில் முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையிலான பாஜக ஆட்சி நடைபெற்று வருகிறது.  இங்குள்ள காசியாபாத் என்ற நகரில் பசிபிக் மால் பகுதியில், ஸ்பா மையங்கள் இயங்கி வருகின்றன.

இந்த ஸ்பா மையங்களில் விபசாரம் நடைபெறுவதாக போலீஸாருக்கு தகவல் சென்றுள்ளது.

இதையடுத்து,  போலீஸ் தனிப்படை அமைக்கப்பட்டு, ஸ்பா மையங்களில் அதிரடி சோதனை நடத்தினர்.

இதில், 8 ஸ்பா மையங்களில் இருந்து 60 பெண்கள் மற்றும் 38 ஆண்களை பிடித்துச் சென்று அவர்களிடம் விசாரணை நடத்தி வருவதாக துணை காவல் ஆணையாளர் விவேக் தெரிவித்துள்ளார்.

மேலும்,  ‘’ஸ்பா மையங்களின் மேலாளர்கள் மற்றும் உரிமையாளர்களுக்கு எதிராக பாலியல் சுரண்டல் தடுப்புச் சட்டம் 1950ன் கீழ் தொடர்புடைய பிரிவுகளின் கீழ் வழக்கு ஒன்று பதிவு செய்யப்பட்டுள்ளதாகத்’’ தெரிவித்துள்ளார்.

இந்தச் சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

போலி உறுப்பினர்களுக்கு நகைக்கடன் தள்ளுபடி செய்யப்பட்டதா? அறப்போர் இயக்கம் கேள்வி..!

ராஜ்யசபா தலைவருக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் தள்ளுபடி: பெரும்பான்மை இல்லை என அறிவிப்பு..!

ராகுல் காந்தி என்னை நெருங்கி வந்தார்: பா.ஜ.க. பெண் எம்.பி. புகாரால் பரபரப்பு.!

பாஜக எம்பிக்கள் தள்ளியதால் எனக்கு காயம்: மல்லிகார்ஜுன கார்கே புகார்

காங்கிரஸ் கட்சியின் வன்முறை நாடாளுமன்றம் வரை சென்றுள்ளது: கங்கனா ரனாவத்

அடுத்த கட்டுரையில்