Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

இந்திய மாட்டிற்கு இருக்கும் பாதுகாப்பு கூட பெண்களுக்கு இல்லை - வெளிநாட்டவர் எதிர்ப்பு

Advertiesment
இந்தியா
, செவ்வாய், 17 ஏப்ரல் 2018 (08:10 IST)
இந்திய மாட்டிற்கு இருக்கும் பாதுகாப்பு கூட பெண்களுக்கு இல்லை என சிறுமி ஆசிஃபா கொலைக்கு வெளிநாட்டவர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
நாட்டில் பெண்கள் மீதான பாலியல் தொல்லைகள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. குறிப்பாக சிறுமிகள் பெருமளவில் பாலியல் சீண்டல்களுக்கு ஆளாக்கப்படுகிறார்கள்.
 
காஷ்மீர் மாநிலம் கத்துவா மாவட்டத்தில் 8 வயது சிறுமி ஆசிஃபா கடந்த ஜனவரி மாதம் கற்பழித்து கொலை செய்யப்பட்டார். இச்சம்பவம் நாடு முழுவதும் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது. சிறுமி ஆசிஃபா கொலை வழக்கில் காவல் துறை அதிகாரிகள், சிறார், பாஜக கட்சியை சார்ந்தவர்கள் உட்பட 8 பேர் சம்பந்தப்பட்டிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இச்சம்பவத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் கேரளாவில் பல வீடுகளில், இந்த வீட்டில் 10 வயதில் சிறுமி இருக்கிறாள். எனவே பாஜகவினர் ஓட்டு கேட்டு உள்ளே வராதீர் என பதாகை ஒட்டப்பட்டிருந்தது.
இந்நிலையில் வெளிநாட்டவர் உங்கள் பெண் குழந்தைகளை இந்தியாவுக்கு அழைத்துச் செல்லாதீர்கள், இந்தியாவில் மாடுகளுக்கு இருக்கும் பாதுகாப்பு கூட பெண்களுக்கு இருப்பதில்லை. உங்கள் பயணத்தின் கடைசி நகரமாக இந்தியாவை வைத்துக்கொள்ளுங்கள். ஏனென்றால் அது உங்கள் சுடுகாடாகக்கூட இருக்கலாம் என்ற வாசகங்கள் அடங்கிய டி-ஷர்ட் அணிந்து தங்களது எதிர்ப்பைக் காட்டத் தொடங்கியுள்ளனர்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

காவிரி விவகாரம் - மனித சங்கிலி போராட்டம் நடத்த எதிர்கட்சிகள் முடிவு