தமிழக அரசு அவசர சட்டம் இயற்றினால் இந்த ஒரு ஆண்டு மட்டும் நீட் தேர்வில் இருந்து தமிழகத்திற்கு விலக்கு அளிக்கப்படும் என பொய்யான வாக்குறுதி கொடுத்த நிர்மலா சீதாராம்னுக்கு பாதுகாப்பு துறை பதவி அளித்தது தமிழகமக்களின் உணர்வை கிண்டல் செய்வதுபோல் உள்ளது என்று விஜயதாரணி எம்.எல்.ஏ கூறியுள்ளார்.
மேலும் நீட்தேர்வு விவகாரத்தில் தமிழகத்தின் உரிமையை நிலைநாட்ட, தமிழக அரசு அனிதா சட்டம் கொண்டுவர வேண்டும் என்றும் அவர் மேலும் கூறினார்.
முன்னதாக பாதுகாப்புத் துறை அமைச்சராக இருந்த மனோகர் பாரிக்கர், கடந்த சில மாதங்களு்ககு முன்பு கோவா முதல்–மந்திரியாக பதவி ஏற்றதை தொடர்ந்து அவர் வகித்த வந்த பாதுகாப்புத்துறை அமைச்சர் பதவி, வர்த்தக, தொழில் துறையை தனிப்பொறுப்பாக கவனித்து வந்த நிர்மலாவுக்கு வழங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.