Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

தங்க செயினை திருடிய எறும்புகள்!? – வன அதிகாரி பகிர்ந்த சுவாரஸ்ய வீடியோ!

Advertiesment
ants
, புதன், 29 ஜூன் 2022 (15:36 IST)
தங்க செயின் ஒன்றை எறும்புகள் கூட்டமாக கொண்டு செல்லும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது.

பொதுவாக மனிதனின் தினசரி பழக்க வழக்கங்களை விலங்குகளுடன் ஒப்பிட்டு பேசுவார்கள். அப்படியாக உழைப்புக்கு உதாரணமாக பேசப்படுபவை எறும்புகள். சிறிது சர்க்கரை கொட்டினாலும், ஏதோ ஒரு பூச்சி இறந்து கிடந்தாலும் கூட சிறிது நேரத்திற்கு அவ்வளவு எறும்புகள் அந்த இடத்தில் மொய்த்து விடுவதை பார்க்க முடியும்.

தன்னை விட உருவம் மற்றும் எடையில் அதிகமான உயிரினங்களை கூட எறும்புகள் கூட்டமாக தள்ளிக் கொண்டு சென்று விடும். ஆனால் தற்போது இந்த எறும்புகளின் வீடியோ ஒன்று சமூக வலைதளத்தில் ட்ரெண்டாகியுள்ளது. அதில் எறும்புகள் தங்க செயின் ஒன்றை மெல்ல நகர்த்திக் கொண்டு செல்கின்றன. இந்த வீடியோவை பதிவிட்டுள்ள வன அதிகாரி ஒருவர் “நகையை திருடி செல்லும் இந்த எறும்புகள் மீது எந்த பிரிவில் வழக்குபதிய வேண்டும்” என நகைச்சுவையாக கேட்டுள்ளார்.


Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

சூர்யா, கஜோலுக்கு 'ஆஸ்கர்ஸ்' அகாடமியில் உறுப்பினராக அழைப்பு - சுவாரசிய தகவல்கள்!