Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

உடலுறவுக்கு மறுத்தால் விவாகரத்து பெறலாம் : நீதிமன்றம் அதிரடி உத்தரவு

உடலுறவுக்கு மறுத்தால் விவாகரத்து பெறலாம் : நீதிமன்றம் அதிரடி உத்தரவு

Advertiesment
உடலுறவுக்கு மறுத்தால் விவாகரத்து பெறலாம் : நீதிமன்றம் அதிரடி உத்தரவு
, திங்கள், 12 செப்டம்பர் 2016 (14:21 IST)
கணவரோ மனைவியோ, உடலுறவுக்கு மறுத்தால் விவாகரத்து பெறலாம் என டெல்லி உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.


 

 
டெல்லியில் வசிக்கும் நபர் ஒருவர், ஒரு பெண்ணை 2007ம் ஆண்டு திருமனம் செய்தார். ஆனால், முதலிரவு, தேனிலவு தொடங்கி கடந்த 9 வருடமாக அந்த பெண் உடலுறவுக்கு சம்மதம் தெரிவிக்கவில்லை. இதனால் கோபமடைந்த அப்பெண்ணின் கணவர், குடும்ப நல நீதிமன்றத்தில் விவாகரத்துக்கு விண்ணப்பித்தார்.
 
அவரின் விவாகரத்து மனுவில், என்னுடை மனைவி தாம்பத்ய உறவில் ஈடுபட மறுக்கிறார். அவரின் தாயாரோடு சேர்ந்து கொண்டு என்னை அவமதிக்கிறார்.  என் மீது பொய்யான புகார்களை கூறுகிறார். அவருடன் இனிமேல் என்னால் வாழ முடியாது என்று குறிப்பிட்டிருந்தார். எனவே நீதிமன்றம் அவருக்கு விவாகரத்து வழங்கியது. 
 
ஆனால், அந்த உத்தரவை ரத்து செய்யக் கோரி, அவரின் மனைவி டெல்லி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். மேலும், தன்னுடைய கணவர் மது அருந்துகிறார். என்னை உடல் ரீதியாக துன்புறுத்துகிறார் என்று புகார் கூறியிருந்தார். 
 
அந்த வழக்கு விசாரணையில், அப்பெண்ணின் அப்பீல் மனு தள்ளுபடி செய்யப்பட்டது. மேலும், அவரின் கணவர் பெற்ற விவகாரத்தை உறுதி செய்து நீதிமன்றம் தீர்ப்பளித்து.

webdunia

 

 
நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில், அந்த பெண், தன்னுடைய கணவர் மீது கூறும் குற்றச்சாட்டுகளுக்கு எந்த ஆதாரமும் இல்லை. அதைவிட முக்கியம் அவர் உடல் உறவுக்கு பல ஆண்டுகளாக தொடர்ந்து மறுத்து வந்துள்ளது நிரூபணம் ஆகியுள்ளது.
 
திருமண வாழ்வில் உடலுறவு என்பது முக்கியமான அங்கம். உடலுறவு இல்லாத வாழ்க்கை அர்த்தமற்றது. கணவரோ அல்லது மனைவியோ உடல் உறவுக்கு மறுத்தால், அதையே காரணம் காட்டி விவாகரத்து பெறமுடியும். மருத்துவ ரீதியான காரணங்கள் இருந்தால் மட்டுமே அதுகுறித்து பரிசீலனை செய்ய முடியும். 
 
உடல் உறவுக்கு ஒத்துழைக்காமல் அவர், தனது கணவரை கொடுமை செய்துள்ளார். அதை ஏற்க முடியாது. எனவே அவரின் கணவருக்கு விவாகரத்து அளிக்கிறோம் என்று தீர்ப்பளித்தனர்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

நெருப்போடு விளையாடும் சித்தராமையா: தாமதமாக ஆவேசப்படும் வைகோ!