Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நாடு முழுவதும் விவசாயிகளுக்கு அடையாள அட்டை: ஆதார் போல் இருக்கும் என மத்திய அரசு அறிவிப்பு..!

Siva
செவ்வாய், 10 செப்டம்பர் 2024 (07:47 IST)
நாடு முழுவதும் உள்ள குடிமக்களுக்கு ஆதார் அட்டை இருப்பது போல் நாடு முழுவதிலும் உள்ள விவசாயிகளுக்கு அடையாள அட்டை வழங்கப்படும் என்றும் இது ஆதார் அட்டை போல் இருக்கும் என்றும் மத்திய அரசு தெரிவித்துள்ளது.

விவசாயிகளுக்காக மத்திய அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வரும் நிலையில் அதன் தொடர்ச்சியாக தற்போது புதிய அடையாள அட்டை வழங்க திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

விவசாயிகள் பற்றிய தனிப்பட்ட தரவுகள் இல்லை என்பதால் அந்த குறையை போக்கும் வகையில் இந்த திட்டம் இருக்கும் என்றும் விவசாயிகள் பெயர்களை பதிவு செய்வதற்கான வழிகாட்டு நெறிமுறைகள் விரைவில் வெளியிடப்படும் என்றும் மத்திய அரசு தெரிவித்துள்ளது.

வரும் அக்டோபர் மாதம் விவசாயிகள் பெயர் பதிவு செய்யும் பணி தொடங்கும் என்றும் இதற்காக சிறப்பு முகாம்கள் நடத்தப்படும் என்றும் மார்ச் மாதத்திற்குள் இந்தியாவில் உள்ள அனைத்து விவசாயிகளின் பெயர்களை பதிவு செய்ய இலக்கு நிர்ணயம் செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பொது மக்களுக்கு ஆதார் அட்டை போல் விவசாயிகளுக்கு இந்த அடையாள அட்டை வழங்கப்படும் என்றும் அதன் மூலம் பல்வேறு வேளாண் திட்டத்தின் பயன்களை விவசாயிகள் பெற முடியும் என்றும் டெல்லியில் நடந்த வேளாண் தொழில்நுட்ப உச்சி மாநாட்டில் வேளாண் துறை செயலாளர் தெரிவித்தார்.

Edited by Siva
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

திருப்பதி லட்டில் மாட்டுக் கொழுப்பு கலந்தது உறுதி.! ஆய்வில் அதிர்ச்சி தகவல்..!!

ஆம்ஸ்ட்ராங் கொலையில் தொடர்பு.! செல்வப்பெருந்தகையை நீக்குக.! ராகுல் காந்திக்கு BSP கடிதம்..!

வேளாண் தொழில்நுட்பக் கல்லூரியில் ஸ்பெக்ட்ரா கூட்டரங்கத்தை முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி திறந்து வைத்தார்!

திருப்பதி லட்டில் விலங்கு கொழுப்பா? சந்திரபாபு நாயுடு சத்தியம் செய்வாரா? ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் பதிலடி

இன்றிரவு 10 மாவட்டங்களில் மழை பெய்யும்: வானிலை அறிவிப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments