Webdunia - Bharat's app for daily news and videos

Install App

AI தொழில்நுட்பத்துடன் கூடிய ஐபோன் 16 சீரிஸ் போன்கள்: அறிமுகம் செய்தது ஆப்பிள்..!

Siva
செவ்வாய், 10 செப்டம்பர் 2024 (07:36 IST)
AI தொழில்நுட்பத்துடன் கூடிய ஐபோன்களை ஆப்பிள் நிறுவனம் அறிமுகம் செய்ததை அடுத்து இந்த போனுக்கு வாடிக்கையாளர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பு கிடைத்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளன.

அமெரிக்காவில் நேற்று நடந்த ஆப்பிள் விழாவில் ஐபோன் விரும்பிகளின் விருப்பத்தை நிறைவேற்றும் வகையில் ஏஐ தொழில்நுட்பத்துடன் கூடிய ஐபோன் 16 சீரிஸ் போன்கள் அறிமுகம் செய்யப்பட்டன. அதுமட்டுமின்றி ஆப்பிள் ஸ்மார்ட் வாட்ச், ஏர்பாடுகளையும்  அறிமுகம் செய்தது ஆப்பிள் நிறுவனம்.

128 ஜிபி ஸ்டோரேஜ் கொண்ட ஐபோன் 16 விலை 79 ஆயிரத்து 990 என விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. அதேபோல் ஐபோன் 16 பிளஸ் 89 ஆயிரத்து 990 என்ற விலையில் ஐபோன் 16 புரோ 1 லட்சத்து 44 ஆயிரத்து 990 என்ற விலையில் விற்பனை ஆகும்.

இதே போல் 256 ஜிபி ஸ்டோரேஜ் கொண்ட ஐபோன் 16 புரோ மேக்ஸ் 1 லட்சத்து 44 ஆயிரத்து 990 என்ற விலையில் விற்பனையாகும். இந்தியாவிலும் இந்த ஐபோன்கள் கிடைக்கும் என்றும், செப்டம்பர் 13ஆம் தேதி முதல் முன்பதிவு தொடங்கும் என்றும் ஆப்பிள் நிறுவனம் அறிவித்துள்ளதை  அடுத்து முன்பதிவுகள் குவிந்து வருவதாகவும் செய்திகள் வெளியாகி உள்ளன.

ALSO READ: தினமலர் நாளிதழில் வந்த சட்டம் ஒழுங்கு செய்தி.. தமிழக காவல்துறை விளக்கம்..!

Edited by Siva
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தவெக கொடிகள், துண்டுகள்.. திருப்பூரில் குவியும் ஆர்டர்கள்..!

அமெரிக்க தேர்தலில் வெற்றி எதிரொலி: தெலுங்கு டிரம்ப் கோவிலில் சிறப்பு வழிபாடு..!

நான் கேட்காமலேயே வரதட்சணை கொடுத்தனர்.. மனைவி குடும்பத்தின் மீது மாப்பிள்ளை வழக்கு..!

இன்றிரவு 11 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு.. வானிலை ஆய்வு மையம் தகவல்..!

சென்னை ரிப்பன் மாளிகையை சுற்றி பார்க்க பொதுமக்களுக்கு அனுமதி: முழு விவரங்கள்..!

அடுத்த கட்டுரையில்
Show comments