Publish Date: Tue, 20 Apr 2021 (12:51 IST)
Updated Date: Tue, 20 Apr 2021 (13:34 IST)
CBSE-ஐ தொடர்ந்து ICSE வாரியம் 10 ஆம் வகுப்பு தேர்வுகளை ரத்து செய்துள்ளது என அறிவித்துள்ளது.
ஐசிஎஸ்இ (ICSE ), ஐஎஸ்சி (ISC) நடத்தும் 10, 12 ஆம் வகுப்புப் பொதுத் தேர்வுகள் ஒத்திவைக்கப்படுவதாக CISCE எனப்படும் இந்தியப் பள்ளிச் சான்றிதழ் தேர்வுகளுக்கான கவுன்சில் சென்ற வாரம் அறிவித்தது.
இந்நிலையில், ICSE வாரியம் 10 ஆம் வகுப்பு தேர்வுகளை ரத்து செய்துள்ளது. எனினும், முந்தைய அறிவிப்பின் படி, 12 ஆம் வகுப்பு தேர்வு தேதிகள் பின்னர் அறிவிக்கப்படும் என தெரிவித்துள்ளது. எந்த அடிப்படையில் மாணவர்கள் தேர்ச்சி என பின்னர் அறிவிக்கப்படும் என தகவல்.