Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

ட்ரோன் மூலம் மருந்துகள் சப்ளை.. ஐ.சி.எம்.ஆர் சாதனை..!

ட்ரோன் மூலம் மருந்துகள் சப்ளை..  ஐ.சி.எம்.ஆர் சாதனை..!
, வெள்ளி, 20 அக்டோபர் 2023 (16:47 IST)
ஐ.சி.எம்.ஆர் என்று கூறப்படும் இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் ஹிமாச்சலப் பிரதேசத்தில் லாஹௌல் மற்றும் ஸ்பிட்டி மாவட்டத்தில் கடினமான நிலப்பரப்பு முழுவதும் ட்ரோன் மூலம் அத்தியாவசிய மருந்துகளை வெற்றிகரமாக விநியோகித்து உள்ளது.

ட்ரோன் 100 யூனிட் மருந்துகளை 20 கிலோமீட்டருக்கு மேல் கொண்டு சென்றது என்றும், பயண நேரத்தை 120 நிமிடங்களிலிருந்து 26 நிமிடங்களாகக் குறைத்தது என்றும் ஐ.சி.எம்.ஆர் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இந்த முன்முயற்சி ICMR இன் i-DRONE என்ற  திட்டத்தின் ஒரு பகுதியாகும் என்றும், இது மருந்துகள், இரத்த மாதிரிகள் உள்ளிட்ட முக்கிய மருத்துவ ஆவணங்களையும் தொலைதூர மற்றும் எளிதில் செல்ல முடியாத பகுதிக்கு வழங்க ட்ரோன்களை பயன்படுத்துவதற்கான சாத்தியக்கூறுகளை ஆராய்வதாக கூறப்பட்டுள்ளது.

மருத்துவ பணிகளுக்கு ட்ரோன்களை பயன்படுத்துவது இந்தியாவில் சுகாதாரப் பாதுகாப்பில் புரட்சியை ஏற்படுத்தும் என்றும், தொலைதூர மற்றும் மலைப் பகுதிகளில் சாலைகள் பெரும்பாலும் செல்ல முடியாத பகுதிகளில். ட்ரோன்கள் மிகவும் சவாலான சூழலில் கூட தேவைப்படும் மக்களுக்கு அத்தியாவசிய மருத்துவப் பொருட்களை விரைவாகவும் திறமையாகவும் வழங்க முடியும்  என்றும் ஐ.சி.எம்.ஆர் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Edited by Siva

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

கணவரை திடீரென விவாகரத்து செய்த இத்தாலி பிரதமர்.. ஒரே மகள் எடுத்த அதிரடி முடிவு..!