பீகார் மாநிலத்தில் முதல்வர் நிதிஸ்குமார் தலைமயிலான ஐக்கிய ஜனதா தள தளம் மற்றும் பாஜகவின் கூட்டணி நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், சம்யுக்தா சோசலிஸ்ட் கட்சியின் தலைவர் கர்ப்பூரி தாக்கூரின் பிறந்தநாள் விழா பாட்னாவின் உள்ள ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் தலைமையகத்தில் நடைபெற்றது.
இதில் கலந்துகொண்டு பேசிய முதல்வர் நிதிஸ்குமார், மக்களுக்கான உழைத்த கர்ப்பூரி தனது ஆட்சியில் பாதியிலேயே பதவி நீக்கம் செய்யப்பட்டதுபோல் எனகும் பதவி நீக்கம் செய்யப்படலாம் என சூசமாகக் கூறியுள்ளார்.
மேலும் முதலில் பாஜக கட்சியோடு மோதம் போக்கு கொண்டிருந்த முதல்வர் நிதிஸ்குமார், பாஜகவுடன் இணக்கமானார். அக்கட்சியுடன் கூட்டணி ஆட்சியில் உள்ளதால் தான் அக்கட்சி அனைத்து மக்களுக்கான கட்சியில்லை என்ற ரீதியில் அவர் இவ்வாறு கூறியிருக்கலாம் எனக் கருத்து தெரிவித்து வருகின்றனர்.