வாங்கிய கடனை திருப்பி தர இயலாத கணவன் , அதற்கு பதிலாக தனது மனைவியை கடன்கொடுத்தவரின் ஆசைக்கு மனைவியை விற்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
உத்தர பிரதேசம் மாநிலம், காசியாபாத்தில் நரேஷ் என்ற நபர் பிண்டு என்பவரிடம் 5000 ரூபாய் கடன் வாங்கி இருந்துள்ளார். ஏழ்மை காரணமாக வெகுநாட்கள் ஆகியும் நரேஷால் பணத்தை திருப்பி செலுத்த முடியவில்லை.
இதையடுத்து, நரேஷ் தனது மனைவியை வலுக்கட்டாயமாக பிண்டுவின் வீட்டிற்கு அழைத்து சென்று, தான் வாங்கிய கடனுக்காக மனைவியை கடங்காரனின் ஆசைக்கு இணங்க வைத்துள்ளார். நரேஷின் மனைவியை பலாத்காரம் செய்து விட்டு, வெளியே வந்த பிண்டு இந்த காரியம் செய்ய இவ்வளவு நாளா என கூறி நரேஷை அறைந்துள்ளார்.
கடனை தீர்பதற்காக தனது கணவரே, என்னை அடகு வைத்து விட்டார் என நரேஷின் மனைவி போலீஸில் புகார் அளித்ததை அடுத்து நரேஷ், பிண்டு ஆகிய இருவரையும் போலீஸார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.