Webdunia - Bharat's app for daily news and videos

Install App

முதல் மனைவி கோபித்துக் கொண்டு சென்றதால் இரண்டாவது மனைவியை ரயிலில் இருந்து தள்ளிவிட்ட கணவன் !

Webdunia
வியாழன், 28 நவம்பர் 2019 (08:45 IST)
மும்பையில் தனது இரண்டாவது மனைவியுடன் எழுந்த வாக்குவாதத்தில் ரயிலில் சென்றுகொண்டிருக்கும் போது தாக்கி கீழே தள்ளிவிட்டுள்ளார் கணவர்.

மும்பையைச் சேர்ந்த சாகர் என்பவருக்கு ஏற்கனவே திருமணமாகி குழந்தை உள்ள நிலையில் ராணி என்ற பெண்ணோடு தொடர்பு வைத்துள்ளார். இவர்களின் பழக்கத்தால் ராணி கர்ப்பமாகியுள்ளார். அதனால் வேறு வழியின்றி ராணியைத் திருமணம் செய்து கொண்டுள்ளார் சாகர்.

சாகரின் இரண்டாவது திருமனத்தால் அவரது முதல் மனைவி கோபித்துக்கொண்டு வீட்டை விட்டு வெளியேறியுள்ளார். இதனால் அதிர்ச்சியான சாகர் ராணியிடம் தற்போது இந்த குழந்தை வேண்டாம் என்று அதனைக் கருக்கலைப்பு செய்ய சொல்லியுள்ளார். அதற்கு ராணி மறுக்கவே இருவருக்கும் இடையில் வாக்குவாதம் எழுந்துள்ளது.

ரயிலில் இருவரும் சென்று கொண்டிருந்தபோது இது சம்மந்தமாக சண்டையிட்டுள்ளனர். அப்போது சாகர் ராணியை வேகமாகத் தாக்கி ரயிலில் இருந்து கீழே தள்ளிவிட்டுள்ளார். ரயில் மிகவும் வேகமாக செல்லாததால் ராணி சிறு காயங்களுடன் அதிஷ்டவசமாக உயிர் பிழைத்துள்ளார். இதுபற்றி ராணி புகாரளிக்க போலிஸார் சாகரைத் தேடி வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மணிப்பூரில் அமைதி ஒப்பந்தம்: குகி அமைப்பு, மாநில, மத்திய அரசுகளிடையே முத்தரப்பு ஒப்பந்தம் கையெழுத்து

அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்ப அவகாசம் நீட்டிப்பு.. அமைச்சர் தகவல்..!

மன்னிப்பு கேட்பது போல பாலியல் சீண்டல்.. பெண் கவுன்சிலர் புகார்

இந்தியாவின் சிறந்த 100 கல்வி நிறுவனங்களில் தமிழகம் முதலிடம்!

ஜிஎஸ்டி சீரமைப்பை வரவேற்கிறோம்.. ஆனால் அதே நேரத்தில்... தங்கம் தென்னரசு

அடுத்த கட்டுரையில்
Show comments