மனைவியை கொலை செய்து உடல் மீது பெட்டை விரித்து காதலியுடன் உல்லாசமாக இருந்த கணவன்
மனைவியை கொலை செய்து உடல் மீது பெட்டை விரித்து காதலியுடன் உல்லாசமாக இருந்த கணவன்
டெல்லியின் ஷாகார்பூர் பகுதியில் தெருவின் ஓரத்தில் கிடந்த சாக்கு பையில் இருந்து துர்நாற்றம் வீசியது. இதை அடுத்து காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து பார்த்த போது, சாக்குபைக்குள் ஒரு பெண்ணின் உடல் ரத்தகாயங்களோடு இருப்பதை கண்டனர்.
விசாரணையில் அந்த உடல் ஹாலிம் என்ற பெண்ணுடையது என தெரியவந்தது. மேலும், ஹாலிமை அவரது கணவர் பைரோஸ் கொலை செய்தது தெரிய வந்தது. இதனையடுத்து ஹாலிமின் கணவர் பைரோஸை காவல்துறையினர் கைது செய்தனர்.
பைரோஸ், தனது வாக்குமூலத்தில், ”ஹாலிமிற்கும், எனக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்து வாழ்ந்து வந்தோம். பின்னர், பூஜா என்ற பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டு, அவருடன் நான் தனியாக வசித்து வந்தேன். இதற்கு ஹாலிம் எதிர்ப்பு தெரிவித்தார். இதனால், எனக்கும் அவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதில், பொறுமை இழந்த நானும், பூஜாவும் ஹாலிமை கொலை செய்தோம். பின்னர் உடலை கட்டில் மீது போட்டு, அதன் மீது பெட்டை விரித்து 2 நாட்களாக அதில் படுத்து வந்தோம். உடல் அழுகி துர்நாற்றம் வீசியதால் அதனை சாக்கு பையில் போட்டு தெருவில் வீசிவிட்டுடோம்” என்றார்.