Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

மனைவி, மகளை நடுரோட்டில் கதற விட்டு கள்ளக்காதலியுடன் கிளம்பிய கணவன்!

Advertiesment
மனைவி, மகளை நடுரோட்டில் கதற விட்டு கள்ளக்காதலியுடன் கிளம்பிய கணவன்!
, வியாழன், 23 ஜூலை 2020 (12:11 IST)
திருப்பதியில் கணவன் தனது மனைவி மற்றும் பிள்ளையை சாலையில் விட்டு கள்ளக்காதலியுடன் சென்றது காண்போரை கலங்க வைத்துள்ளது. 
 
திருப்பதியில் கடந்த 13 ஆண்டுகளுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்ட தம்பதியினருக்கு 8 வயதில் ஒரு பெண் குழந்தை உள்ளது. காய்கறி கடை வைத்து பிழைப்பு நடத்தி வந்த இவர்களது வாழ்க்கையில் இன்னொரு பெண் நுழைந்ததால் வாழ்க்கையே தலைகீழானது. 
 
ஆம், காதல் மனைவி மற்றும் குடும்பத்தினருக்கு தெரியாமல் வெங்கடச்சலம் வேறு ஒரு பெண்ணுடன் கள்ளத்தொடர்பு வைத்துக் கொண்டு வேறு ஒரு இடத்தில் குடும்பம் நடத்தி வந்தார். கள்ளக்காதலி கர்ப்பம் ஆன நிலையில் மனையிடம் வருவதை நிறுத்திய இவர் மீது மனைவி புகார் அளித்தார். 
 
கள்ளகாதலியுடன் வெங்கடாசலம்போலீசாரால் விசாரனைக்கு வரவழைக்கப்பட்டார். இது குறித்து தகவல் அறிந்த முதல் மனைவி சரஸ்வதி தனது குழந்தையுடன் காவல் நிலையத்திற்கு வந்தார். ஆனால் போலீசார் எதுவும் கண்டு கொள்ளவில்லை.
 
விசாரணை முடிந்து வெங்கடாசலம் பைக்கில் கள்ளகாதலியுடன் வெளியே வந்த போது முதல் மனைவியும் அவரது குழந்தையும் கண்ணீர் விட்டு கதறியபடி இருந்த போதும் காவலர்களும், கணவனும் இறக்கப்படவே இல்லை. இதனைத்தொடர்ந்து திஷா காவல் நிலையத்திற்கு சென்று புகார் அளிக்கும்படி கூறப்பட்டுள்ளது. 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

கொரோனா பாதுகாப்பு உடைகளை இழுத்துச் செல்லும் குரங்குகள் – ஊட்டியில் விபரீதம்!