Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சாப்பாடு சரியில்லை.. மனைவியின் கழுத்தை அறுத்து கொலை செய்த கணவன்..!

Webdunia
புதன், 19 ஏப்ரல் 2023 (11:51 IST)
சாப்பாடு சரியில்லை என்ற காரணத்தால் கணவன் மனைவிக்கிடையே வாக்குவாதம் ஏற்பட்ட நிலையில் மனைவியின் கழுத்தை அறுத்து கணவன் கொலை செய்த சம்பவம் மத்திய பிரதேச மாநிலத்தில் நடந்துள்ளது. 
 
மத்திய பிரதேசம் மாநிலத்தில் உள்ள சித்தி என்ற மாவட்டத்தில் ராம் ஜீவன் என்பவருக்கும் நவமி என்பவருக்கும் கடந்த சில ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடந்த நிலையில் இந்த தம்பதிக்கு ஒரு பெண் குழந்தை உள்ளது.
 
இந்த நிலையில் ராம் ஜீவன் சமீபத்தில் குடித்துவிட்டு மனைவியிடம் சாப்பாடு சரியில்லை என்று சண்டை போட்டுள்ளார். இதனை அடுத்து கணவன் மனைவி இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்ட நிலையில் திடீரென ராம் ஜீவன் தனது மனைவியின் கழுத்தை அறுத்து கொலை செய்துள்ளார். இதை நேரில் பார்த்த அவருடைய மகள் அதிர்ச்சி அடைந்துள்ளார். 
 
இந்த நிலையில் மனைவியை கொலை செய்துவிட்டு தலைமறைவான ராம்ஜீவனை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். சாப்பாடு சரியில்லை என்ற அற்ப காரணத்திற்காக மனைவியை கொலை செய்த கணவர் இனி வாழ்நாள் முழுவதும் சிறையில் இருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

செல்போனில் தலாக் கூறி மனைவியை விவாகரத்து செய்த கணவர்.. வழக்குப்பதிவு செய்த போலீஸ்..!

அதிமுக - பாஜக தோல்விக் கூட்டணி தான் ஊழல் கூட்டணி: முதல்வர் மு.க. ஸ்டாலின்

சென்னையில் ரூ.70 ஆயிரத்தைத் தாண்டிய தங்கம் விலை..! ஒரு லட்சத்தை நெருங்குமா?

ஆளுநர் நிறுத்திவைத்த 10 மசோதாக்களும் சட்டமானது: அரசிதழில் வெளியீடு!

ராணாவை நாடு கடத்தும் முயற்சியை ஆரம்பித்தது நாங்கள் தான்: ப. சிதம்பரம்

அடுத்த கட்டுரையில்
Show comments