Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கள்ளக்காதலி வீட்டில் கணவன் ...இருவரையும் அடித்து போலீஸிடம் ஒப்படைத்த மனைவி !

Webdunia
வியாழன், 25 ஜூலை 2019 (14:39 IST)
ஹைதராபாத்தில் உள்ள கொம்மு கூடம் பகுதியில் வசித்து வந்தவர் லஷ்மன். இவரது மனைவி சுஜன்யா. இவர்கள் இருவருக்கும் 2 வருடங்களுக்கு முன்னர் திருமணம் நடந்தது. இந்நிலையில்  கணவன் வேறு ஒரு பெண்ணுடன் கள்ளத்தொடர்பு வைத்திருந்ததால், கள்ளக்காதலியின் வீட்டுக்குச் சென்று கணவனையும் - கள்ளக்காதலியையும் பிடித்து அடித்து போலீஸ் ஸ்டேசனில் ஒப்படைத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அதாவது, லஷ்மன் -சுஜன்யா தம்பதியர்க்கு திருமணம் ஆன பின்னர். லஷ்மனுக்கு அனுஷா என்ற பெண்ணுடன் தொடர்பு ஏற்பட்டு நாளடைவில் அவர் அவருடனேயே நிரந்தமாக தங்கிவிட்டதாகத் தெரிகிறது.
 
இதனால் மனவேதனை அடைந்த சுஜன்யா, லஷ்மன் வீட்டுக்கு வரவில்லை என்ற காரணத்தால், விவாகரத்து கேட்டு அவருக்கு  நோட்டீஸ் அனுப்பினார்.ஆனால் லஷ்மன் எதுவும் செய்யாமல் அமைதியாய் இருந்ததாகத்  தெரிகிறது.
 
இந்நிலையில், ஒரு முடிவுக்கு வந்து கோபம் அடைந்த சுஜன்யா இன்று அதிகாலை அனுஷாவின் வீட்டிற்குச் சென்று  கணவனையும்,அப்பெண்ணையும் அடித்து தாக்கி இருவரையும் கூக்கட்பள்ளி காவல்நிலையத்தில்  ஒப்படைத்ததாகத் தகவல்கள் வெளியாகிறது.
 
இதுகுறித்து வழக்குப் பதிவு செய்து போலீஸார் விசாரித்து வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மதிமுகவின் முக்கிய பொறுப்பில் இருந்து விலகிய துரை வைகோ.. டிவி பார்த்து தெரிந்து கொண்டேன்.. வைகோ..!

ஜேஇஇ 2-ம் கட்ட முதன்மைத் தோ்வு முடிவுகள் வெளியீடு! 100% மதிப்பெண் பெற்றவர்கள் எத்தனை பேர்?

இனிமேல் குளுகுளுவென பயணம் செய்யலாம்.. சென்னையின் முதல் ஏசி மின்சார ரயி தொடக்கம்..

குஷ்புவின் எக்ஸ் பக்கத்தில் புகுந்து விளையாடிய ஹேக்கர்ஸ்.. அதிர்ச்சி தகவல்..!

’இன்று விடுமுறை’.. அதிமுக - பாஜக கூட்டணி குறித்து ஓபிஎஸ் கமெண்ட்..!

அடுத்த கட்டுரையில்
Show comments