Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

மனைவியின் திருமணத்தை காதலரோடு முடித்து வைத்த கணவர்!

மனைவியின் திருமணத்தை காதலரோடு முடித்து வைத்த கணவர்!
, வியாழன், 31 மே 2018 (19:21 IST)
உத்திரபிரதேச மாநிலத்தில் கணவன் தனது மனைவிக்கு அவளது காதலரோடு திருமணம் செய்து வைத்த சம்பவம் வியப்பை ஏற்படுத்தியுள்ளது. 
 
உத்திரபிரதேச மாநிலம் ஷியாம் நகரை சேர்ந்தவர் சாந்தி. இவருக்கும்  சுஜித் என்ற வாலிபருக்கும் பெற்றோர் திருமணம் செய்து வைத்தனர். ஆனால், திருமணத்திற்கு பின்னர் சாந்தி கணவரோடு வாழ வராமல் தனது தாய் வீட்டிலேயே இருந்துள்ளார். 
 
இதனால், தன்னுடன் குடும்பம் நடத்த வருமாறு சுஜித் அழைத்துள்ளார். அப்போது அவர், தான் ரவி என்பவரை காதலித்து வந்ததாகவும், ஆனால் தனது சம்மதததை கேட்காமல் பெற்றோர் திருமணம் செய்து வைத்து விட்டதாவும், காதலனை மனதில் சுமந்து கொண்டு உங்களுடன் வாழ முடியவில்லை என்றும் கூறியுள்ளார். 
 
இதையடுத்து சுஜித் மனைவியை காதலனுடன் சேர்த்து வைக்க முடிவு செய்து உள்ளூர் போலீளுடன் அவர்களது திருமணத்தை நடத்தி வைத்துள்ளார். இந்த நிகழ்வு பலருக்கும் வியப்பை அளித்துள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

சிறையிலிருந்து முதல்வருக்கு பேஸ்புக் வீடியோ மூலம் கொலை மிரட்டல் விடுத்த கைதி