Webdunia - Bharat's app for daily news and videos

Install App

திருமணமாகி மூன்றே மாதங்கள்.. கணவர் இறப்பை தாங்க முடியாத மனைவியின் அதிர்ச்சி முடிவு..!

Mahendran
செவ்வாய், 27 பிப்ரவரி 2024 (13:21 IST)
திருமணம் ஆகி மூன்று மாதங்கள் ஆன நிலையில் கணவரின் இறப்பை தாங்கிக்கொள்ள முடியாத மனைவி 7வது மாடியில் இருந்து கீழே குதித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் டெல்லியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

டெல்லியை சேர்ந்த அபிஷேக் என்ற 25 வயது நபர் கடந்த நவம்பர் 30ஆம் தேதி தனது உறவினர் பெண் ஒருவரை திருமணம் செய்து கொண்டார். இந்த நிலையில் இருவரும் நேற்று டெல்லியில் உள்ள உயிரியல் பூங்காவை சுற்றி பார்த்து கொண்டிருந்த போது திடீரென அபிஷேக்கிற்கு மாரடைப்பு ஏற்பட்டுள்ளது

இதனையடுத்து உடனடியாக அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் அங்கு அவர் சிகிச்சையின் பலனின்றி இறந்து விட்டதாக மருத்துவர்கள் கூறினர். இதனால் அதிர்ச்சி அடைந்த இளம் மனைவி அபிஷேக் உடலை வீட்டிற்கு கொண்டு வந்த போது அவருடைய சடலத்தை பார்த்து நீண்ட நேரம் அழுது கொண்டே இருந்தார்

இந்த நிலையில் திடீரென அவர் எழுந்து ஏழாவது மாடிக்கு சென்று அங்கிருந்து கீழே குதித்து உயிரை மாய்த்துக் கொண்டார். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில் கணவன் மனைவி இருவரது உடலையும் அருகருகே இறுதி சடங்கு செய்ததாக தகவல் வெளியாகியுள்ளது

Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இந்திய - சீன உறவில் ஒரு புதிய அத்தியாயம்: பிரதமர் மோடி - ஜி ஜின்பிங் சந்திப்பு

காவல்துறைக்கு, பொறுப்பு டிஜிபி நியமனம் என்பது அதிகார துஷ்பிரயோகம்: அண்ணாமலை கண்டனம்..

25,000 வாக்காளர்களுக்கு ஒரு ஒன்றிய செயலாளர்: தவெக தலைவர் விஜய் உத்தரவு

விஜய் தலைமையில் ஒரு அணி அமையும்: டிடிவி தினகரன் கணிப்பு..!

சென்னையில் நாளை முதல் டீ,காபி விலை உயர்வு. டீக்கடை உரிமையாளர்கள் சங்கம் அறிவிப்பு..

அடுத்த கட்டுரையில்
Show comments