மனைவியின் மூக்கை கடித்து துப்பிய கணவன்.. கடன் பிரச்சனையில் ஏற்பட்ட விபரீதம்..!

Mahendran
சனி, 12 ஜூலை 2025 (10:03 IST)
பெங்களூரில் கடன் வாங்கியதை திருப்பிக் கொடுப்பது குறித்த பிரச்சினையில் கணவன் மனைவிக்கிடையே வாக்குவாதம் ஏற்பட்ட நிலையில், ஒரு கட்டத்தில் கணவன் மனைவியின் மூக்கை கடித்து துப்பிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
 
பெங்களூரில் விஜய் மற்றும் வித்யா தம்பதிகள் தாங்கள் வாங்கிய கடனைத் திருப்பி செலுத்துவது குறித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக தெரிகிறது. ஒரு கட்டத்தில் இருவரும் கைகலப்பில் ஈடுபட, அப்போது விஜய் தன் மனைவி வித்யாவின் மூக்கை கடித்து துப்பியதாகவும், வித்யாவின் அலறல் கேட்டு அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் உடனடியாக வந்து கணவன் மனைவி சண்டையை நிறுத்தியதாகவும் கூறப்படுகிறது.
 
இந்த நிலையில், மூக்கில் படுகாயம் அடைந்த வித்யா அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், அவருக்கு தற்போது தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. 
 
இது குறித்து காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். சாதாரண கடன் பிரச்சினைக்காக மனைவியின் மூக்கை கடித்து துப்பிய கணவரால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பாஜகவால் என்னை தோற்கடிக்க முடியாது.. சவால் விடுத்த மம்தா பானர்ஜி..!

தமிழ்த்தாய் வாழ்த்து பாடாமல் செம்மொழி பூங்கா திறப்பு விழாவா? அண்ணாமலை கண்டனம்..!

சீன பாஸ்போர்ட் கேட்டு அருணாச்சல பிரதேச பெண்ணை துன்புறுத்தவில்லை: சீனா மறுப்பு..!

என்னை வங்காளத்தில் குறிவைத்தால் மொத்த தேசத்தையும் குலுங்க வைப்பேன்: மம்தா பானர்ஜி

தகனத்திற்காக கொண்டு வரப்பட்ட பெண் சவப்பெட்டியில் உயிருடன் மீட்பு! இன்ப அதிர்ச்சியில் உறவினர்கள்..!

அடுத்த கட்டுரையில்
Show comments