Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

ஒரு ஆளுக்கு இவ்ளோ சிம் கார்டு..? அதுக்கு மேல வெச்சிருந்தா ஜெயில்தான்! - மத்திய அரசு அதிரடி!

Sim Cards

Prasanth Karthick

, வியாழன், 18 ஜூலை 2024 (13:50 IST)

பயங்கரவாதிகள், குற்றவாளிகள் அதிகமான சிம்கார்டுகளை பயன்படுத்தி குற்ற செயல்களில் ஈடுபடுவதை தடுக்கும் விதமாக மத்திய அரசு புதிய கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.

நாட்டில் பல்வேறு தொலைத்தொடர்பு நிறுவனங்களின் சிம்கார்டு சேவைகள் உள்ள நிலையில் ஒருவர் தனது அடையாள அட்டையை காட்டி சிம் கார்டுகளை வாங்கி கொள்ள முடியும். ஆனால் ஒருவர் எவ்வளவு சிம் கார்டுகளை வாங்க முடியும் என்ற வரையறை இல்லாமல் இருப்பதால் குற்றவாளிகள் பல சிம் கார்டுகளை வாங்கி பயன்படுத்திவிட்டு தூக்கி வீசிவிடும் சம்பவங்கள் பல பகுதிகளிலும் நடந்து வருகிறது. மேலும் சிம் கார்டுகளை பயன்படுத்தி பலர் சைபர் மோசடிகளிலும் ஈடுபடுவது அதிகரித்துள்ளது.

இதனால் ஒரு நபர் அதிகபட்சமாக எத்தனை சிம் கார்டுகள் வைத்துக் கொள்ள முடியும் என்பதற்கு மத்திய அரசு புதிய வரையறையை ஏற்படுத்தியுள்ளது. அதன்படி ஒரு நபர் அதிகபட்சமாக 9 சிம்கார்டுகள் வரை வைத்துக் கொள்ள முடியும். அதேபோல அசாம், ஜம்மு காஷ்மீர் பகுதிகளை சேர்ந்தவர்கள் அதிகபட்சமாக 6 சிம் கார்டுகளை மட்டுமே வைத்துக் கொள்ள முடியும்.

இதை மீறி 10க்கும் மேற்பட்ட சிம்கார்டுகளை ஒரு நபர் பயன்படுத்தினால் முதல் முறை பிடிபடும்போது ரூ.50 ஆயிரமும், இரண்டாவது முறை பிடிபடும்போது ரூ.3 லட்சமும் அபராதமாக விதிக்கப்படும். மேலும் 3 ஆண்டு சிறை தண்டனையும் கிடைக்கும் வாய்ப்புள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Edit by Prasanth.K


Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

நாதக பிரமுகர் கொலை வழக்கில் கைதானவர்களுக்கு கால் எலும்பு முறிவு.. போலீசார் தகவல்..!