Webdunia - Bharat's app for daily news and videos

Install App

என்னது காந்தி தற்கொலை பண்ணிக்கிட்டாரா??

Arun Prasath
திங்கள், 14 அக்டோபர் 2019 (11:56 IST)
பள்ளித் தேர்வில் காந்தி எவ்வாறு தற்கொலை செய்து கொண்டார்? என்று கேள்வி கேட்கப்பட்டுள்ளது இந்தியர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.

குஜராத்தில் உள்ள ஒரு தனியார் பள்ளி ஒன்றில், பள்ளி தேர்வுகள் நடைபெற்று வந்த நிலையில், 9 ஆம் வகுப்புக்கான வினாத்தாளில் காந்தி எவ்வாறு தற்கொலை செய்து கொண்டார்? என்று கேள்வி கேட்கப்பட்டுள்ளது. இந்த செய்தி கல்வியாளர்களை மட்டுமின்றி மொத்த இந்தியர்களையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.

1948 ஆம் ஆண்டு மகாத்மா காந்தி, நாதுராம் கோட்சே என்ற மதவெறியனால் சுட்டு கொள்ளப்பட்டது இந்தியர்களால் அறியப்பட்டதே. ஆகினும் காந்தி எதற்காக தற்கொலை செய்யப்பட்டாரா? என்று வினா தாளில் கேட்டுள்ளது குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. ஒரு தமிழ் திரைப்படத்தில் “காந்தி செத்துட்டாரா?” என்று ஒருவர் அதிர்ச்சியடைந்து கேட்பது போல் ஒரு நகைச்சுவை காட்சி வரும். அது போல் காந்தி தற்கொலை செய்து கொண்டாரா? என அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இது குறித்து மாநில கல்வித் துறை பதிலளித்துள்ளதில், ”இந்த வினாவிற்கும் கல்வித் துறைக்கும் எந்த சம்பந்தமும் இல்லை எனவும், இது குறித்து விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாகவும்  கூறியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அமெரிக்காவை தாக்க தயார் நிலையில் ஈரான்.. உலகப்போர் மூளுமா?

மாணவர் விடுதிகளில் வழங்கப்படும் உணவு கால்நடைகளுக்கு விற்கப்படுகிறதா? அண்ணாமலை ஆவேசம்

பிரியங்கா காந்தியின் வாகனத்தை மறித்த யூடியூபர்.. அதிரடியாக கைது செய்த போலீஸ்..!

2029ஆம் ஆண்டும் மோடி தான் பிரதமர்.. சிவசேனாவுக்கு பதிலடி கொடுத்த முதல்வர்..!

விடுபட்டோருக்கு மகளிர் உரிமை தொகை எப்போது? அமைச்சர் தங்கம் தென்னரசு தகவல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments