சீனாவிலும் வூகான் என்ற மாகாணத்தில் ஆரம்பித்த கொரோனா வைரஸ் அந்நாடு முழுவதையும் ஆட்டிப் படைத்து வருகிறது. சுமார் 2 ஆயிரம் பேர்களுக்கு மேல் சீனாவில் இந்த வைரஸ் தாக்குதலால் பலியாகி உள்ள நிலையில் தற்போது சீனாவின் அண்டை நாடுகளிலும் ஐரோப்பிய நாடுகளிலும் இந்த வைரஸ் பரவி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது
குறிப்பாக ஜப்பான் தென் கொரியா ஈரான் போன்ற நாடுகளில் கொரோனா வைரசின் தாக்கம் அதிகம் இருப்பதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் கொரோனா வைரஸ் 28 டிகிரிக்கு மேல் வெப்பநிலையில் உயிர் இழந்துவிடும் என்பதால் இந்தியாவில் இந்த வைரஸ் ஆக வாய்ப்பே இல்லை என்று கூறப்பட்டது
இருப்பினும் வெளிநாட்டிலிருந்து வரும் நபர்களுக்கு இந்த வைரஸ் வர வாய்ப்பு இருப்பதாக கூறப்பட்டது. அந்த வகையில் துபாயில் இருந்து தெலுங்கானா வந்த சாப்ட்வேர் இன்ஜினியர் ஒருவருக்கு கொரோனா வைரஸ் இருப்பது உறுதி செய்யப்பட்டது
இவர் கடந்த மாதம் 14ஆம் தேதி துபாய்க்கு ஒரு மீட்டிங்கில் கலந்து கொள்ள சென்றதாகவும் அப்போது ஹாங்காங்கை சேர்ந்த சிறப்பு பிரதிநிதிகளை சந்தித்ததாகவும் அப்போது அவருக்கு கொரோனா வைரஸ் தொற்றி இருக்கலாம் என்றும் கூறப்படுகிறது
பிப்ரவரி 20ஆம் தேதி அந்த சாப்ட்வேர் இன்ஜினியர் தெலுங்கானாவுக்கு திரும்பிய போது அவருக்கு திடீரென காய்ச்சல் ஏற்பட்டதாகவும் இதனை அடுத்து அவருக்கு சோதனை செய்த போது கொரோனா வைரஸ் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிகிறது. இதன்மூலம் ஹாங்காங்கில் அவர் சந்தித்த பிரதிநிதிகள் மூலம் தான் அவருக்கு கொரோனா வைரஸ் பரவி இருக்கும் என்று கூறப்படுவதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது. தற்போது அந்த சாப்ட்வேர் இன்ஜினியர் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது