கேரளாவில் உள்ள உப்பாசனா மருத்துவ கல்லூரியில் விடுதி மாணவிகள் ஆடை மாற்றும்போது அறை கதவுகளை மூடக்கூடாது என அக்கல்லூரி முதலவர் வினோதமாக கட்டளை பிறப்பித்துள்ளார்.
கேரள மாநிலம் கொல்லம் மாவட்டதில் உப்பாசனா மருத்துவ கல்லூரி உள்ளது. ஜெசிகுட்டி என்பவர் இக்கல்லூரி முதல்வராக உள்ளார். இவர் கல்லூரி மாணவிகளுக்கு கடுமையான விதிமுறைகள் விதித்து அதை பின்பற்றுமாறு வற்புறுத்தி வந்துள்ளார்.
விடுதி மாணவிகள் அறை கதவுகளை மூடிக்கொண்டு மொபைல் போன் பயன்படுத்த வாய்ப்புள்ளது என்பதால் ஆடை மாற்றும்போது கூட அறை கதவுகளை மூடக்கூடாது என வினோதமாக விதிமுறைகளை விதித்துள்ளார்.
இதனால் பொறுமை இழந்த மாணவிகள், தேவையில்லாமல் மாணவர்களின் சுதந்திரத்தில் தலையிடும் கல்லூரி முதல்வர் பதவி விலக வேண்டும் என வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுப்பட்டுள்ளனர்.