Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

ஹரிகிருஷ்ணா சடலத்துடன் செல்பி எடுத்த மருத்துவமனை ஊழியர்கள்

ஹரிகிருஷ்ணா சடலத்துடன் செல்பி எடுத்த மருத்துவமனை ஊழியர்கள்
, சனி, 1 செப்டம்பர் 2018 (09:12 IST)
மறைந்த ஆந்திர மாநில முன்னாள் முதலமைச்சர் என்.டி.ராமாராவின் மகன் ஹரிகிருஷ்ணாவின் சடலத்துடன் மருத்துவமனை ஊழியர்கள் செல்பி எடுத்துக் கொண்டது கடும் சர்ச்சையைக் கிளப்பியுள்ளது. 
ஆந்திர மாநில முன்னாள் முதலமைச்சர் என்.டி.ராமாராவின் மகனும், ஜீனியர் என்.டி.ஆரின் தந்தையும், நடிகரும், தெலுங்கு தேசம் கட்சியை சேர்ந்தவருமான ஹரிகிருஷ்ணா நல்கொண்டா என்ற பகுதியில் கடந்த 29 ஆம் நடைபெற்ற கார் விபத்தில் பரிதாபமாக உயிரிழந்தார்.
webdunia
இதற்கிடையே ஹரிகிருஷ்ணா உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் அறிவித்த பின்னர், ஹரிகிருஷ்ணாவின் சடலத்துடன் மருத்துவமனையின் கம்பவுண்டர் நரசிம்மா, 3 செவிலியர்களுடன் செல்பி எடுத்து அதனை தனது நண்பர்களுக்கு பகிர்ந்துள்ளார்.
 
இந்த புகைப்படமானது வேகமாக பரவவே, விளம்பரம் தேட இவ்வளவு கீழ்தரமாக நடந்து கொண்ட மருத்துவமனை ஊழியர்களுக்கு பலர் கடும் கண்டனங்களை தெரிவித்தனர்.
 
இதனையடுத்து மருத்துவமனை நிர்வாகம் இரக்கமற்று செயல்பட்ட அந்த ஊழியர்களை பணிநீக்கம் செய்தது. மேலும் அனைவரிடமும் பகிரங்க மன்னிப்பு கேட்பதாக மருத்துவமனை நிர்வாகம் மன்னிப்பு அறிக்கை வெளியிட்டது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

தங்கையை மது குடிக்க வைத்து அண்ணன் செய்த கீழ்த்தரமான செயல்