Webdunia - Bharat's app for daily news and videos

Install App

உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு திடீர் உடல்நலக்குறைவு: தேர்தல் பிரச்சாரம் ரத்து

Webdunia
திங்கள், 14 அக்டோபர் 2019 (21:23 IST)
மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கடந்த சில நாட்களாக தீவிர தேர்தல் பிரச்சாரத்தை ஓய்வின்று செய்து கொண்டிருந்த நிலையில் இன்று அவருக்கு  திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டதால் இன்று கலந்து கொள்ள திட்டமிட்டிருந்த ஹரியானா பிரசார கூட்டத்தில் அவர் பங்கேற்கவில்லை.
 
ஹரியானா மாநிலத்தில் அக்டோபர் 21ம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ளது. இதனை முன்னிட்டு மாநிலம் முழுவதும் அனைத்து அரசியல் கட்சிகளும் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றன.
 
இந்த நிலையில் ஹரியானா மாநிலத்தில் உள்ள படேகாபாத் மாவட்டத்தின் தோஹானா, சிர்சா மாவட்டத்தின் எல்லெனாபாத் மற்றும் ஹிசார் மாவட்டத்தின் நர்நாடு பகுதிகளில் பாஜக சார்பில் தேர்தல் பிரசாரக் கூட்டத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்த 3 பிரசார கூட்டங்களிலும் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கலந்து கொள்ள திட்டமிடப்பட்டிருந்தது
 
ஆனால் அவருக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டதால் மேற்கண்ட மூன்று பிரசாரக் கூட்டங்களில் அவரால் பங்கேற்க இயலவில்லை என சிர்சா தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் சுனிதா டக்கல் பாஜக தொண்டர்களிடையே தெரிவித்தார். அமித்ஷா இந்த கூட்டங்களில் கலந்து கொள்ளவில்லை என்றாலும் கூட்டம் திட்டமிட்டபடி நடந்தது என்பதும் இந்த கூட்டத்தில் மத்திய அமைச்சர் நரேந்திர சிங் தோமர் உள்ளிட்ட பாஜக தலைவர்கள் கலந்து கொண்ட் உரையாற்றினர் என்பதும் குறிப்பிடத்தக்கது

தொடர்புடைய செய்திகள்

5 ரூபாய் லஞ்சம் வாங்கிய கணினி ஆபரேட்டர் .! இந்த வினோத சம்பவம் எங்கு தெரியுமா.?

காற்றாலை திட்டத்திற்கு எதிர்ப்பு.! அதானி நிறுவனத்திற்கு எதிராக இலங்கையில் வழக்கு!!

சிறுவன் உயிரிழந்ததன் எதிரொலி.! வனத்துறை வசம் செல்கிறது குற்றால அருவிகள்..!!

புது உச்சத்தை நோக்கி தங்கம் விலை.. ரூ.55000ஐ நெருங்கியது ஒரு சவரன் விலை..!

ஓட்டலுக்குள் புகுந்து சூறையாடிய 5"பேர் கொண்ட கும்பலை சி.சி.டி.வி காட்சிகளை வைத்து போலீசார் தேடுதல் வேட்டை!

அடுத்த கட்டுரையில்
Show comments