பேர் அண்ட் லல்வி அழகுசாதன கிரீமில் இருக்கும் பேர் என்ற வார்த்தையை நீக்க இந்துஸ்தான் யூனிலிவர் நிறுவனம் முடிவு செய்துள்ளது.
உலக அழகி போட்டிகளில் இந்திய பெண்கள் பட்டம் வெல்ல ஆரம்பித்த பின்னர், இந்தியா அழகு சாதனப் பொருட்களின் மிகப்பெரிய சந்தையாக மாறியது. அந்தவகையில் இந்திய அழகுசாதன பொருட்கள் உற்பத்தியில் இந்துஸ்தான் யுனிலிவர் நிறுவனம் முக்கியப் பங்காற்றியது. அந்த நிறுவனத்தின் பேர் அண்ட் லவ்லி க்ரீம் மிக அதிகமாக பயன்படுத்தப்பட்டது.
அதே நேரத்தில் கருப்பு நிறத்தவரை தாழ்வு மனப்பாண்மையில் ஆழ்த்துவதாகவும் விமர்சனங்கள் எழுந்தன. தற்போது அமெரிக்காவில் ஜார்ஜ் பிளாய்ட் கொலைக்கு பின் blacklivesmatter என்ற கருத்து தீவிரமாக விவாதிக்கப்பட்டு வருகிறது. இதையடுத்து பேர் அண்ட் லவ்லி க்ரீம் பெயரில் உள்ள பேர் என்ற பெயரை நீக்க முடிவு செய்துள்ளது இந்துஸ்தான் யூனிலிவர் நிறுவனம். இன்னும் சில மாதங்களில் புதிய பெயர் மற்றும் புதிய வடிவமைப்பிலான கிரீம்கள் விற்பனைக்கு வரும் என தெரிகிறது.