Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

நடிகையை கற்பழித்த தயாரிப்பாளர் – இசையமைப்பாளரும் சிக்கினார்

Advertiesment
நடிகையை கற்பழித்த தயாரிப்பாளர் – இசையமைப்பாளரும் சிக்கினார்
, வியாழன், 6 ஜூன் 2019 (12:48 IST)
நடிக்க வாய்ப்பளிப்பதாக கூறி மாடல் நடிகை ஒருவரை தயாரிப்பாளரும், இசையமைப்பாளரும் சேர்ந்து கற்பழித்த சம்பவம் மும்பையில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மும்பையின் சார்கோப் பகுதியில் வசிப்பவர் மாடல் நடிகை ஒருவர். பட தயாரிப்பாளரான முந்த்ராசிங் நாகர் என்பவரின் அறிமுகம் இவருக்கு கிடைத்துள்ளது. ஒருநாள் முந்த்ராசிங் திரைப்பட விஷயமாக பேச வேண்டுமென நடிகையை மலாடில் உள்ள தனது வீட்டிற்கு அழைத்திருக்கிறார். அங்கு கரன் வாஹி என்ற இசையமைப்பாளரை அறிமுகம் செய்து வைத்துள்ளார். நடிகைக்கு விருந்தளித்த அவர்கள் தாங்கள் உருவாக்கப்போகும் முதல் படத்தில் உதவி இயக்குனராக வேலை பார்க்கும்படி நடிகையிடம் பேசியுள்ளனர்.

தற்செயலாக நடிகை எழுந்து சமையலறை பக்கம் சென்றபோது பின் தொடர்ந்து வந்த தயாரிப்பாளர் கட்டியணைத்து முத்தம் கொடுத்திருக்கிறார். அதிர்ச்சியடைந்த நடிகை அவரை தள்ளிவிட்டு வெளியே செல்ல முயலும்போது மயக்கமடைந்து விட்டார். காலையில் அவர் எழுந்தபோது உடல் சோர்வாக இருப்பதை உணர்ந்திருக்கிறார். உடலில் சில இடங்களில் காயங்களும் ஏற்பட்டிருக்கிறது. உடனே அவர் உணவில் மயக்கமருந்து கலந்து கொடுத்து இருவரும் தன்னை அனுபவித்துவிட்டதை புரிந்து கொண்டார். இது குறித்து காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தயாரிப்பாளரையும், கரன் வாஹியையும் கைது செய்துள்ளனர். இச்சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

பூசாரி மகளிடம் சில்மிஷம்? தாக்கப்பட்ட தலித் சிறுவன்: பதறவைக்கும் வீடியோ!