வெள்ளத்தில் மூழ்கிய வங்கி.. ரொக்கம், லாக்கரில் உள்ள நகைகள் என்ன ஆனது.. வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி..!

Siva
திங்கள், 7 ஜூலை 2025 (14:36 IST)
இமாச்சலப் பிரதேச வெள்ளத்தில் துனாக் வங்கி மூழ்கிய நிலையில் அவ்வங்கியில் இருந்த கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் சேதம் அடைந்திருப்பதாகவும், இதனால்  நூற்றுக்கணக்கான வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி அடைந்திருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
 
இமாச்சலப் பிரதேசத்தின் மண்டி மாவட்டத்தில் உள்ள துனாக் நகரில் அமைந்துள்ள கூட்டுறவு வங்கி, தினந்தோறும்  வணிகர்கள் உட்பட பல வாடிக்கையாளர்கள் தங்கள் வருவாயை டெபாசிட் செய்துள்ளன.ர் மேலும் மக்கள் தங்கள் வாழ்நாள் சேமிப்புகளை, பணம், ஆவணங்கள் மற்றும் நகைகளாக டெபாசிட் செய்தும் லாக்கரிலும் வைத்துள்ளனர்,.
 
இந்த நிலையில் இமாச்சல பிரதேச மாநிலத்தைப் புரட்டி போட்ட மேக வெடிப்பு மற்றும் திடீர் வெள்ளத்தில்வங்கி கட்டிடத்தின் முதல் தளம் முழுவதும் நீர் மற்றும் குப்பைகளால் நிரம்பியுள்ளது. வெள்ளத்தின் வேகம் அதிகமாக இருந்ததால், ஒரு பக்க ஷட்டர் வேரோடு பிடுங்கப்பட்டதுடன், மற்ற இரண்டு ஷட்டர்களும் வளைந்து போயின.
 
இதனால் வங்கியில் இருக்கும்  கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள மற்றும் லட்சக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள நகைகள் என்ன ஆனது என்பது குப்பைகள் அகற்றப்பட்ட பின்னரே தெரிய வரும்.
 
மேலும் ஷட்டர் திறந்திருப்பதால் மதிப்புமிக்க பொருட்கள் திருடுபோகும் அபாயம் இருப்பதால், சில உள்ளூர்வாசிகள் கூறுகின்றனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
 
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தவெகவில் இருக்கும் சிக்கல்!.. சமாளிப்பாரா செங்கோட்டையன்!.. ஒரு பார்வை...

திருமணத்திற்கு மறுத்த ஆசிரியை வெட்டி கொலை.. சட்டம் - ஒழுங்கை காப்பாற்றுங்கள்: அன்புமணி கோரிக்கை

4 ஆண்டுகளாக பங்குச்சந்தையில் வர்த்தகம்.. ரூ.35 கோடி ஏமாந்த 72 வயது முதியவர்..!

'டிக்வா' புயல் எச்சரிக்கை: நாளை 4 மாவட்டங்களுக்கு அதி கனமழைக்கான 'ரெட் அலர்ட்'!

செங்கோட்டையனை வரவேற்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்: விஜய் வெளியிட்ட அறிக்கை..!

அடுத்த கட்டுரையில்
Show comments