Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஆளுநரை சந்தித்த பாஜக எம்எல்ஏக்கள்: நம்பிக்கையில்லா தீர்மானமா? இமாச்சலப் பிரதேசத்தில் பரபரப்பு..!

Mahendran
புதன், 28 பிப்ரவரி 2024 (10:20 IST)
இமாச்சலப் பிரதேச மாநில ஆளுநரை பாஜக எம்எல்ஏக்கள் சந்தித்து  ஆளும் காங்கிரஸ் அரசுக்கு எதிராக நம்பிக்கையில்லா  தீர்மானம் கொண்டு வரவுள்ளதாக அறிவித்துள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
 
இமாச்சலப் பிரதேச ஆளுநர் ஷிவ் பிரதாப் சுக்லாவை பாஜக எம்எல்ஏக்கள் இன்று சந்தித்தனர். இந்த சந்திப்பில் இமாச்சல பிரதேசத்தில் ஆளும் காங்கிரஸ் அரசுக்கு எதிராக நம்பிக்கையில்லா  தீர்மானம் கொண்டு வர பாஜக திட்டமிட்டிருப்பதாக் அவர் தெரிவித்தனர்.
 
ஜெய் ராம் தாக்கூர் தலைமையிலான பாஜக எம்எல்ஏக்கள் ஆளுநரை சந்தித்த நிலையில் இமாச்சலப் பிரதேச மாநிலத்தில் ஆளும் காங்கிரஸ் ஆட்சிக்கு ஆபத்து என தெரிகிறது.
 
ஏற்கனவே நேற்று இமாச்சல பிரதேச மாநிலத்தில் மாநிலங்களவை  தேர்தல் நடந்த போது பாஜகவிடம் காங்கிரஸ் தோல்வி அடைந்துள்ளது என்பதும் நேற்றைய தேர்தலில் ஆறு காங்கிரஸ் எம்எல்ஏக்கள் கட்சி மாறி பாஜகவுக்கு வாக்கு செலுத்தியதால் ஒரு காங்கிரஸ் வேட்பாளர் தோல்வி அடைந்ததாகவும் கூறப்பட்டது.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அமெரிக்காவில் இருந்து ராணா வருகை எதிரொலி: முக்கிய மெட்ரோ ரயில் நிலையம் மூடல்..!

கோவில் மேல் விழுந்த பழமையான ஆலமரம்.. பலர் பலி என அச்சம்..!

இன்று குருமூர்த்தியை சந்தித்த அண்ணாமலை.. நாளை அமித்ஷா - குருமூர்த்தி சந்திப்பு.. பாஜகவில் பரபரப்பு..!

துண்டுச்சீட்டில் கேள்விகளை எழுதி கொடுத்த திமுக எம்பி.. இந்த கேள்விகள் மட்டும் தான் கேட்க வேண்டும்?

நாளை தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை. வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை..!

அடுத்த கட்டுரையில்
Show comments