கேரளாவில் பலத்த மழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம்

Webdunia
திங்கள், 1 ஆகஸ்ட் 2022 (11:42 IST)
கேரளாவில்  இன்று முதல் பலத்த மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது..

தற்போது, தென்மேற்குப் பருவமழை பெய்து வரும் நிலையில், கடந்த ஆண்டைப் போன்று குறைவாக மழை பதிவாகியுள்ளது.

இந்த நிலையில் மேற்கு தொடர்ச்சி மழை ஒட்டியுள்ள கேரளாவில் இன்று முதல் பலத்த மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

நேற்று, கோட்டயம்,எர்ணாகுளம், மலப்புரம் உள்ளிட்ட மாவட்டங்களுக்கு மஞ்சள் அலெர்ட் விடுக்கப்பட்டது.

இந்த நிலையில், இன்று வயநாடு தவிர 13 மாவட்டங்களுக்கு முன்னெச்சரிக்கை விடப்பட்டுள்ளது. மேலும்,  ஆகஸ்ட் 2, 3 ஆகிய தேதிகளில் கனமழை பெய்யும் என்பதால், திருச்சூர், திருவனந்தபுரம் உள்ளிட்ட 8 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலரெட் விடப்பட்டுள்ளது. மற்ற மாவட்டங்களுக்கு மஞ்சல் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.

இதனால், முதல்வர் பினராயி  விஜயன் தலைமையிலான கேரள அரசு தக்க பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சீமானின் மாடு மேய்க்கும் திட்டத்திற்கு அனுமதி மறுப்பு: சபநாயகர் காரணமா?

சென்னையின் முக்கிய திட்டத்திற்கு ரூ.200 கோடி கொடுத்த ஸ்ரீ சத்ய சாயி பாபா அறக்கட்டளை..!

தெற்கு வங்கக்கடலில் புயல் உருவாக வாய்ப்பு: 48 மணி நேரத்தில் தீவிரமடையும் காற்றழுத்த தாழ்வுப்பகுதி

28 புதிய ரயில்களை வாங்க சென்னை மெட்ரோ நிர்வாகம் டெண்டர்..! எத்தனை கோடி மதிப்பு?

நள்ளிரவில் வீடு வீடாக சென்று உதவி செய்யுங்கள் என்ற கூச்சலிட்ட பெண்.. பொதுமக்கள் அச்சம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments