Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

இமாச்சல பிரதேசத்தில் திடீர் மேக வெடிப்பு: அடியோடி சாய்ந்த கட்டிடம்.. 20 பேர் மாயம்..!

இமாச்சல பிரதேசத்தில் திடீர் மேக வெடிப்பு:  அடியோடி சாய்ந்த கட்டிடம்.. 20 பேர் மாயம்..!

Mahendran

, வியாழன், 1 ஆகஸ்ட் 2024 (12:10 IST)
இமாச்சலப் பிரதேசம் மாநிலத்தில் திடீரென ஏற்பட்ட மேக வெடிப்பு காரணமாக கன மழை பெய்ததாகவும் இதில் 20 பேரை காணவில்லை என்றும் மீட்பு படையினர் விரைந்து மீட்பு நடவடிக்கைகளை எடுத்து வருவதாகவும் தகவல் வெளியாகி உள்ளன.
 
இமாச்சலப் பிரதேச மாநிலத்தில் சிம்லா அருகே  இன்று காலை திடீரென மேக வெடிப்பு ஏற்பட்டது. இதனால் ஏற்பட்ட கன மழை மற்றும் பெருவெள்ளம் காரணமாக 20 பேர் மாயமாகிவிட்டதாகவும், மாயமானவர்களை பேரிடர் மேலாண்மை மீட்பு படையினர் தேடி வருவதாகவும் கூறப்படுகிறது.
 
இதுகுறித்த தகவல் அறிந்தவுடன் மீட்பு குழுவினர், உள்ளூர் காவல்துறையினர், தன்னார்வை தொண்டர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளதாகவும் காவல்துறை தலைவர் சஞ்சீவ் காந்தி மற்றும் உயர் அதிகாரிகள் மீட்பு பணிகள் குறித்து ஆலோசனை செய்து வருவதாகவும் கூறப்படுகிறது.
 
மேக வெடிப்பு காரணமாக அந்த பகுதியில் உள்ள ஒரு சில சாலைகள் துண்டிக்கப்பட்டு உள்ளதாகவும் எனவே மீட்புக் குழுவினர் சம்பவ இடத்திற்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.
 
சிம்லாவில் இருந்து 125 கிலோமீட்டர் தொலைவில் வேக வெடிப்பு நிகழ்ந்துள்ளதாகவும் இந்த சம்பவத்தில் இதுவரை இருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. ஏற்கனவே உத்தரகாண்ட் பகுதியில் கன மழை பெய்து அங்கு இயல்பு வாழ்க்கை பாதித்துள்ள நிலையில் தற்போது இமாச்சல பிரதேசத்தில் ஏற்பட்ட மேக வெடிப்பு காரணமாக பெரும் சேதம் ஏற்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. ஒருசில கட்டிடங்கள் அடியோட சாய்ந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
 
Edited by Mahendran
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

கொள்ளிடம் ஆற்றில் வெள்ளம்.. சாயும் நிலையில் உயர் மின்னழுத்த கோபுரம்.. தீவிர கண்காணிப்பு..!