Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

கொரோனா எச்சரிக்கையை வானிலை அறிவிப்பு போல நினைக்கிறார்கள்! – மத்திய அரசு வேதனை!

Advertiesment
கொரோனா எச்சரிக்கையை வானிலை அறிவிப்பு போல நினைக்கிறார்கள்! – மத்திய அரசு வேதனை!
, புதன், 14 ஜூலை 2021 (08:26 IST)
இந்தியாவில் கொரோனா இரண்டாம் அலை பாதிப்பு நீடிக்கும் நிலையில் மக்கள் கொரோனா எச்சரிக்கையை அலட்சியம் காட்டுவதாக மத்திய அரசு வேதனை தெரிவித்துள்ளது.

இந்தியாவில் கொரோனா இரண்டாம் அலை பாதிப்பால் கடந்த சில மாதங்கள் முன்னதாக தினசரி பாதிப்பு 4 லட்சத்தை தொட்டது. இந்நிலையில் ஊரடங்கு, தடுப்பூசி ஆகியவற்றால் இரண்டாம் அலை பாதிப்புகள் தற்போது 40 ஆயிரத்திற்கும் கீழ் குறைந்துள்ளன. எனினும் மூன்றாவது அலை உருவாக வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது.

இந்நிலையில் பல்வேறு மாநிலங்களில் தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளதால் மக்கள் மாஸ்க் அணியாமல் சுற்றி வருவது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் இதுகுறித்து வருத்தம் தெரிவித்துள்ள மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் “கொரோனா மூன்றாம் அலை குறித்த எச்சரிக்கையை மக்கள் ஏதோ வானிலை அறிக்கை சொல்வதை போல எடுத்துக் கொள்கிறார்கள். எச்சரிக்கையை மக்கள் தீவிரமாக கவனத்தில் கொண்டு செயல்பட வேண்டும்” என தெரிவித்துள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

தடுப்பூசிகளை கலந்து போட்டால் ஆபத்து! – எச்சரிக்கும் உலக சுகாதார அமைப்பு!