Webdunia - Bharat's app for daily news and videos

Install App

எதையும் செய்ய மாட்டார்..!. அதுதான் மோடியின் கேரன்டி.! மல்லிகார்ஜுன கார்கே...!!

Senthil Velan
புதன், 24 ஏப்ரல் 2024 (16:35 IST)
பிரதமர் மோடி வாக்குறுதி அளிப்பார், ஆனால் எதையும் செய்ய மாட்டார் என்று காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே கேள்வி எழுப்பியுள்ளார்.
 
கேரளாவில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், ஒவ்வொரு குடும்பத்துக்கு ரூ.15 லட்சம் தருவதாக நரேந்திர மோடி கூறியதோடு, வெளிநாட்டில் காங்கிரஸ் பதுக்கி வைத்துள்ள கருப்பு பணத்தை மீட்பேன் என்றார்.
 
அந்தப் பணம் எங்கே? அடுத்த தேர்தலில் விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பாக்குவேன் என்றார். இப்போது மீண்டும் பிரதமர் மோடியின் கேரன்டி என சொல்லி கொண்டிருக்கிறார். அவர் எதையும் செய்ய மாட்டார். அதுதான் மோடியின் கேரன்டி எனத் மல்லிகார்ஜுன கார்கே தெரிவித்துள்ளார்.
 
மேலும், தனது எக்ஸ் தள பக்கத்தில் பதிவிட்டுள்ள வீடியோவில், “பாஜக ஆர்எஸ்எஸ் தலைவர்கள் இதுவரை தேசத்துக்காக என்ன தியாகம் செய்திருக்கிறார்கள்? என்று கேள்வி எழுப்பினார். 

ALSO READ: சமூக நீதியை நிலைநாட்டுவதில் தமிழ்நாடு முக்கிய பங்கு..! முதலமைச்சர் ஸ்டாலின் பெருமிதம்!
 
தேர்தலுக்காக, தாலி பாதுகாப்பாக இருக்காது என்று மக்களிடம் மோடி பொய் சொல்கிறார் என்றும் இந்த நாட்டை 55 ஆண்டுகள் காங்கிரஸ் ஆட்சி செய்தது. ஒருமுறையாவது இப்படி நடந்திருக்கிறதா? என்றும் மல்லிகார்ஜுன கார்கே தெரிவித்தார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

காவலரை கல்லால் அடித்து கொன்ற கொலையாளி.. என்கவுண்டரில் கொல்லப்பட்டதால் பரபரப்பு..!

எங்களுக்கு யார் பற்றியும் கவலை இல்லை: திமுக vs தவெக போட்டி குறித்து துரைமுருகன் கருத்து

ரூ. 2.82 லட்சம் கோடிக்கு "எக்ஸ்" தளத்தை விற்பனை செய்த எலான் மஸ்க்.. என்ன காரணம்?

செங்கோட்டையன் பொதுச்செயலாளர், ஈபிஎஸ் எதிர்க்கட்சி தலைவர்.. பாஜக போடும் திட்டம்?

2026ஆம் ஆண்டின் முதலமைச்சர் யார்? கருத்துக்கணிப்பில் விஜய்க்கு 2வது இடம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments