Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ராகுல் காந்தி தொகுதியில் யாரும் வாக்களிக்கக் கூடாது.. துப்பாக்கியுடன் பொதுமக்களை மிரட்டிய மாவோயிஸ்ட்..!

Mahendran
புதன், 24 ஏப்ரல் 2024 (16:20 IST)
ராகுல் காந்தி போட்டியிடும் வயநாடு தொகுதியில் யாரும் வாக்களிக்க கூடாது என்று துப்பாக்கியுடன் வந்து பொதுமக்களை மாவோயிஸ்ட் மிரட்டி இருப்பதாக கூறப்படும் வீடியோ பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 
 
காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி கேரளாவில் உள்ள வயநாடு தொகுதியில் போட்டியிடுகிறார் என்பதும் அவரை எதிர்த்து கம்யூனிஸ்ட் கட்சி ஆனி ராஜா என்ற பெண்ணை வேட்பாளர் ஆக்கி உள்ளது என்பதும் தெரிந்தது. 
 
காங்கிரஸ் மற்றும் கம்யூனிஸ்ட் ஆகிய இரு கட்சிகளும் இந்தியா கூட்டணியில் இருக்கும் நிலையில் ஒருவரை ஒருவர் எதிர்த்து போட்டியிடுவது இந்தியா கூட்டணியின் நம்பகத்தன்மையை சந்தேகப்படும் வகையில் உள்ளது என்று கூறப்பட்டு வருகிறது. 
 
இந்த நிலையில் வயநாடு தொகுதியில் உள்ள மலை கிராமத்தில் திடீரென மாவோயிஸ்டுகள் நான்கு பேர் துப்பாக்கியுடன் வந்து பொதுமக்களை மிரட்டியதாகவும் யாரும் வாக்களிக்க கூடாது என்று கூறியதாகவும் செய்திகள் வெளியாகி உள்ளது. 
 
மத்திய அரசும் சரி, மாநில அரசும் சரி நமது நன்மைக்காக எதுவும் செய்யவில்லை என்றும் எனவே தேர்தலில் யாரும் வாக்களிக்க கூடாது என்று மாவோயிஸ்டுகள் மிரட்டியதாக வெளியாகி இருக்கும் வீடியோ தற்போது இணையத்தில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பள்ளிகள் கட்ட ரூ.7500 நிதி ஒதுக்கீடு.. ஆனால் மரத்தடியில் வகுப்புகள்: அண்ணாமலை ஆவேசம்..!

காதலருடன் மனைவிக்கு திருமணம் செய்து வைத்த கணவர்.. குழந்தைகளும் பங்கேற்பு..!

நீர்மூழ்கி சுற்றுலா கப்பல் விபத்து.. 44 சுற்றுலா பயணிகளின் கதி என்ன?

பொதுச்செயலாளர் பதவியில் இருந்து ஈபிஎஸ் விலக வேண்டும்.. இல்லையென்றால்.. ஓபிஎஸ் எச்சரிக்கை

சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் தீ விபத்து: சிக்னல் பாதிப்பு என தகவல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments