Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பாகிஸ்தான் - பங்களாதேஷ் பார்டருக்கு சென்றாரா யூடியூபர் ஜோதி? உள்துறை செயலாளர் திடுக் தகவல்..!

Siva
செவ்வாய், 20 மே 2025 (18:11 IST)
ஹரியானா மாநிலத்தை சேர்ந்த ஜோதி மல்கோத்ரா, பாகிஸ்தானுக்கு இந்திய ராணுவ ரகசியங்களை கசிய விட்டிருக்கலாம் என்ற குற்றச்சாட்டின் அடிப்படையில் கைது செய்யப்பட்டு உள்ள நிலையில், அவரை போலீசார் தீவிரமாக விசாரணை செய்து வருகின்றனர்.
 
இந்த நிலையில், ஹரியானா மாநில உள்துறை செயலாளர் சுனிதா மிஸ்ரா இது குறித்து கூறிய போது, "அனைத்து YouTube சேனல்களும் கண்காணிக்கப்படும்" என்றும், "சில சந்தேகப்படும் வகையான YouTube சேனல்களின் மீது விசாரணை நடத்தப்படும்" என்றும் தெரிவித்துள்ளார்.
 
மேலும், ஜோதி மல்கோத்ரா பங்களாதேஷ், சீனா ஆகிய நாடுகளுக்கு சென்று வந்தது குறித்து ஆய்வு செய்யப்படும் என்றும், குறிப்பாக பாகிஸ்தான்–பங்களாதேஷ் எல்லைப் பகுதிகளில் அவர் சில தொடர்புகளை வைத்துள்ளார் என்ற தகவலின் அடிப்படையில் விசாரணை நடைபெறும் என்றும் கூறினார்.
 
பாகிஸ்தான்–ஆப்கானிஸ்தான் எல்லைப் பகுதியில் நடைபெற்ற சில தீவிரவாத நடவடிக்கைகளின் போது, ஜோதி மல்கோத்ரா சில சந்திப்புகளை நடத்தியதாகவும் கூறப்படுகிறது.
 
இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. மேலும் விசாரணையின் போது பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

4 சுவருக்கு பெயிண்ட் அடிக்க 233 தொழிலாளர்கள்.. ரூ.1 லட்சம் செலவு.. சமூக வலைத்தளத்தில் வைரலாகும் போலி பில்கள்..!

2 வருடமாக தன்னை போலீஸ் என கூறிய போலி அதிகாரி.. பிடிபட்டது எப்படி?

மொஹரம் பண்டிகை அரசு விடுமுறை ஞாயிறா? திங்களா? தமிழக அரசு விளக்கம்..!

பிரஷாந்த் கிஷோர் தவெகவின் ஆலோசகர் பதவியிலிருந்து விலகல்: என்ன காரணம்?

காவல்துறை அதிகாரியை சரமாரியாக அடித்த பெட்ரோல் பங்க் ஊழியர்கள்.. என்ன நடந்தது?

அடுத்த கட்டுரையில்
Show comments