ஹரியானா மாநிலத்தில் மேஜிக் தெரிந்த ஒரு நபர் தனக்கு மந்திர தந்திரங்கள் தெரியும் என்று கூறி 120 பெண்களை ஏமாற்றி சீரழித்த விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஹரியானாவை சேர்ந்த பாபா அமர்புரி என்பவர் மேஜிக் கலையில் சிறந்து விளங்குபவராக இருந்துள்ளார். ஆனாலும் இவருக்கு போதுமான வருமானம் இல்லாததால் தன்னுடைய மேஜிக் வித்தையை மந்திர தந்திரம் என்று கூறி அந்த பகுதி பெண்களை நம்ப வைத்துள்ளார்.
இதனையடுத்து அவரை மந்திரவாதி என்று நம்பிய பல பெண்கள் அவரிடம் தங்கள் குறைகளை கூறி அதற்கு நிவாரணம் தேடி வந்தனர். இதனையடுத்து தன்னிடம் குறை கூற வரும் பெண்களிடம் பாலியல் வன்கொடுமை செய்து அதனை வீடியோ எடுத்தும் அமர்புரி மிரட்டியுள்ளதாக தெரிகிறது. சுமார் 200 அப்பாவி பெண்கள் இவரிடம் ஏமாந்துள்ள நிலையில் ஒரு பெண் துணிச்சலாக காவல்துறையில் புகார் அளித்தார்
இந்த புகாரின்மேல் நடவடிக்கை எடுத்த போலீசார் மேஜிக்மேன் அமர்புரியை கைது செய்து அவரிடம் இருந்து ஆபாச வீடியோக்கள் அனைத்தையும் பறிமுதல் செய்தனர். மந்திரவாதி என்று கூறி 120 பெண்களின் வாழ்க்கையை சீரழித்தவர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பெண்கள் அமைப்புகள் கோரிக்கை விடுத்துள்ளன