Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ராபர்ட் வத்ராவைத் தான் சந்திக்கவில்லை: ஹர்திக் பட்டேல் மறுப்பு

Webdunia
வியாழன், 14 டிசம்பர் 2017 (06:01 IST)
இன்று நடைபெறும் குஜராத் மாநிலத்தின் இரண்டாம் கட்ட தேர்தல் மோடி மற்றும் ராகுல்காந்தி இடையேயான போர் ஆகத்தான் பார்க்கப்படுகிறது. காங்கிரஸ் தலைவராக பதவியேற்கபோகும் ராகுலுக்கு குஜராத் மக்கள் வெற்றி என்ற பரிசை அளிக்க போகின்றார்களா? என்பதை இன்னும் சில நாட்களில் தெரிந்து கொள்ளலாம்

இந்த நிலையில் காங்கிரஸ் கட்சிக்கு முழு ஆதரவு கொடுத்து பிரச்சாரம் செய்து வருபவர் ஹர்திக் பட்டேல். இவர் மீது ஒருசில அபாண்டமான பழியை பாஜக தரப்பில் இருந்து போட்டு பார்த்தும் இவருக்கு வரும் கூட்டத்தை கட்டுப்படுத்த முடியவில்லை. ஒருவேளை காங்கிரஸ் வெற்றி பெற்றால் அதில் மிகப்பெரிய பங்கு இவருக்கு உண்டு.

இந்த நிலையில் ஹர்திக் பட்டேல் ரகசியமாக ராகுலையும், ராபர்ட் வதேராவை சந்தித்ததாக ஹர்திக்கின் அமைப்பில் இருந்து விலகிய தினேஷ் பாம்பானியா என்பவர் கூறி பெரும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளார். இதை கடுமையாக மறுத்துள்ள ஹர்திக், தான் ராபர்ட் வத்ராவைச் சந்தித்ததாகப் பொய் கூறுபவர்கள், நவாஸ் செரீப்பையும், தாவூத் இப்ராகிமையும் சந்தித்ததாகக் கூடச் சொல்வார்கள் என்று தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கவர்னர் ரவியை விஜய் சந்தித்தது ஏன்? அப்பா எஸ்.ஏ.சந்திரசேகர் விளக்கம்..!

நாகர்கோவில் காசிக்கு 3 ஆண்டுகள் சிறை! தந்தைக்கு 2 ஆண்டுகள் சிறை..!

சாத்தூர் அருகே பட்டாசு ஆலையில் வெடிவிபத்து: 4 அறைகள் தரைமட்டம்: 6 பேர் பரிதாப பலி..!

தமிழ்நாட்டுல அறிவிக்கப்படாத எமெர்ஜென்சிய கொண்டு வந்துட்டீங்களா? - மு.க.ஸ்டாலினுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கேள்வி!

ஏறிய வேகத்தில் இறங்கும் தங்கம் விலை.. இன்று ஒரே நாளில் 360 ரூபாய் குறைவு..!

அடுத்த கட்டுரையில்
Show comments