Webdunia - Bharat's app for daily news and videos

Install App

குலாம் நபி ஆசாத்தின் புதிய கட்சி இன்று அறிவிப்பா?

Webdunia
ஞாயிறு, 4 செப்டம்பர் 2022 (10:08 IST)
காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகிய முன்னாள் ஜம்மு காஷ்மீர் முதல்வர் குலாம் நபி ஆசாத் என்ற புதிய கட்சியைத் தொடங்க இருப்பதாகவும் அது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்று வெளியாகும் என்று கூறப்படுவதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது 
 
காங்கிரஸ் கட்சியில் 50 ஆண்டுகளுக்கும் மேலாக இருந்த ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதல்வர் குலாம் நபி ஆசாத் சமீபத்தில் காங்கிரஸ் கட்சியில் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக விலகினார்.
 
அதன் பிறகு அவர் தனிக்கட்சி ஆரம்பிக்க இருப்பதாக கூறப்படும் நிலையில் அவரது ஆதரவாளர்கள் பலரும் காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகினார்கள் என்பதும், ராகுல் காந்தி மீது குற்றம் சாட்டினார் என்பதும் குறிப்பிடத்தக்கது
 
இந்த நிலையில் 2024 ஆம் ஆண்டு நடைபெறும் பொதுத் தேர்தலை சந்திக்கும் வகையில் குலாம்நபி ஆசாத் இன்று தனது புதிய அரசியல் கட்சி குறித்த அறிவிப்பை வெளியிடுவார் என்றும் மிகப்பெரிய பேரணி நடத்த திட்டமிட்டிருப்பதாகவும் கூறப்படுகிறது 
 
மேலும் விரைவில் நடைபெற உள்ள ஜம்மு காஷ்மீர் சட்டசபை தேர்தலில் குலாம் நபி ஆசாத் போட்டியிடுவார் என்றும் அவரது கட்சி அம்மாநிலத்தில் ஆட்சியைப் பிடிக்கும் என்றும் கூறப்படுகிறது.
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஆண்டுக்கு இனி 15 சிலிண்டர் மட்டும்தான்! எண்ணெய் நிறுவனங்கள் புதிய விதிமுறை!

ஆட்டோ ஓட்ட விரும்பும் பெண்களுக்கு ‘பிங்க் ஆட்டோ’ - முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்குகிறார்!

ஒவ்வொரு தாம்பத்ய உறவுக்கும் ரூ.5000 கேட்ட மனைவி.. போலீசில் புகார் அளித்த கணவர்..!

அண்ணாமலை தரம் தாழ்ந்து விஜய்யை விமர்சனம் செய்தது கண்டிக்கத்தக்கது: தவெக கண்டனம்..!

மற்றுத்திறனாளிகளுக்ககு ஸ்கூட்டர்.. திருப்பத்தூர் வரை நான்கு வழிச்சாலை.. சட்டசபையில் முக்கிய அறிவிப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments