Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

வந்தா ஐபிஎஸ் அதிகாரியா வருவேன்! – சபதம் எடுத்த குஜராத் ‘பெண் சிங்கம்’

வந்தா ஐபிஎஸ் அதிகாரியா வருவேன்! – சபதம் எடுத்த குஜராத் ‘பெண் சிங்கம்’
, வியாழன், 16 ஜூலை 2020 (15:17 IST)
குஜராத்தில் அமைச்சர் மகனுடன் ஏற்பட்ட வாக்குவாதம் காரணமாக தனது பதவியை ராஜினாமா செய்துள்ள பெண் காவலர், தான் ஒரு ஐபிஎஸ் அதிகாரியாக திரும்ப வருவதாக தெரிவித்துள்ளார்.

குஜராத் மாநிலத்தில் சில நாட்களுக்கு முன்பு ஊரடங்கை மீறி நள்ளிரவில் வெளியே சுற்றிய மந்திரியின் மகனை பெண் காவலர் சுணிதா தடுத்து நிறுத்திய சம்பவம் வைரலானது. இதற்காக அவரை தலைமை செயலகத்துக்கு பணியிட மாற்றம் செய்த நிலையில், அவர் தனது பணியை ராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளார்.

மந்திரி மகனுடனான அவரது வாக்குவாதம் இணையத்தில் வைரலான நிலையில், அரசியல் பலம் உள்ளதை கண்டு அஞ்சாமல் அவர் நடந்து கொண்டதை பாராட்டி பலர் அவரை ‘லேடி சிங்கம்’ என்ற பெயரில் சமூக வலைதளங்களில் ட்ரெண்ட் செய்துள்ளனர்.

இந்நிலையில் தனது பணியை ராஜினாமா செய்துள்ள சுனிதா தான் ஒரு ஐபிஎஸ் அதிகாரியாக மீண்டும் வர விரும்புவதாக கூறியுள்ளார். ஒருவேளை ஐபிஎஸ் தேர்வில் தேர்ச்சியடையாவிட்டாலும், மக்களுக்கு உதவும் வகையில் ஒரு வழக்கறிஞராகவோ அல்லது ஊடகவியலாளராகவோ மாற விரும்புவதாகவும் தெரிவித்துள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

கொரோனா பரிசோதனை கருவி: உலகிலேயே மலிவான விலையில் தயாரித்த டெல்லி ஐஐடி