Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

முத்தத்தில் சிக்கிக்கொண்ட நாக்குகள் – கத்தியை எடுத்து மனைவியின் நாக்கை அறுத்த கொடூரக் கணவன் !

Advertiesment
முத்தத்தில் சிக்கிக்கொண்ட நாக்குகள் – கத்தியை எடுத்து மனைவியின் நாக்கை அறுத்த கொடூரக் கணவன் !
, வியாழன், 17 அக்டோபர் 2019 (08:09 IST)
முத்தம் கொடுக்கும் கணவன், மனைவியின் நாக்குகள் பிண்ணி பிணைந்து கொண்டதால் பதற்றமடைந்த மனைவியின் நாக்கைக் கணவன் கத்தியால் வெட்டியுள்ளார்.

குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் வசித்து வரும் தம்பதிகளான ஆயுப் மன்சாரி மற்றும் தஸ்லீம் ஆகிய இருவரும் கடந்த அக்டோபர் 9 ஆம் தேதி முத்தம் கொடுத்துள்ளனர். அப்போது உணர்ச்சிப் பெருக்கில் இருவரும் மூர்க்கமாக செயல்பட இருவரது நாக்குகளும் பிண்ணிப் பிணைந்து கொண்டுள்ளன. இருவரும் எவ்வளவு முயன்றும் நாக்குகளைப் பிரிக்க முடியவில்லை. அதனால் சமையலறைக்கு மனைவியை அழைத்துச் சென்ற மன்சாரி கத்தியை எடுத்து மனைவியின் நாக்கை அறுத்து இரு நாக்குகளையும் அங்கிருந்து தப்பி ஓடியுள்ளார். நாக்கை அறுத்த வலியில் தஸ்லீம் அலறியுள்ளார். அதனால் பயந்த மன்சாரி வீட்டை வெளிப்புறமாகப் பூட்டிவிட்டு அங்கிருந்து ஓடியுள்ளார்.

இது சம்மந்தமாக மன்சாரியைப் போலிஸார் பிடித்து விசாரிக்கும்போது தனக்கு வேறு வழியில்லாததால் அவ்வாறு செய்ததாகக் கூறியுள்ளார். நாக்கறுக்கப்பட்ட தஸ்லீம் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அவரால் இன்னும் சரியாக உணவு கூட உண்ண முடியவில்லை என சொல்லப்படுகிறது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

மதுரை அருகே 16 வயது மாணவி கொலை – இரட்டையர்கள் செய்த கொடூர செயல் !