Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

500 கோடி இல்ல; 500 ரூபாய் செலவில் நடந்த திருமணம்

Advertiesment
500 கோடி இல்ல; 500 ரூபாய் செலவில் நடந்த திருமணம்
, வெள்ளி, 25 நவம்பர் 2016 (12:11 IST)
500 கோடி ரூபாய் செலவில் தடால் புடலாக நடக்காமல், வெறும் 500 ரூபாய் மட்டுமே செலவு செய்து குஜராத்தில் ஒரு தம்பதியினர் திருமணம் நடத்தியுள்ளனர்.





பழைய 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாக்காசாக அறிவிக்கப்பட்டதால் நாடெங்கும் சில்லறை தட்டுப்பாடு நிலவி வருகிறது. இந்தநிலையில் குஜராத் மாநிலம் சூரத் நகரில் ஒரு ஜோடிக்கு வெறும் 500 ரூபாய் செலவில் மட்டுமே திருமணம் நடைபெற்றுள்ளது.  திருமணத்தில் மணமக்களை வாழ்த்த வந்தவர்களுக்கு தேநீரும், தண்ணீரும் மட்டுமே கொடுக்கப்பட்டுள்ளது. விருந்தினர்களும் இவற்றை மகிழ்ச்சியுடன் பருகி சென்றனர்.

 அண்மையில் கர்நாடகா மாநில முன்னாள் அமைச்சர் ஜனார்த்தன ரெட்டி, தனது மகளுக்கு 500 கோடி ரூபாய் செலவில் மிகப் பிரமாண்டமாக திருமணம் நடத்தியது மக்கள் மத்தியில் பலத்த சர்ச்சையை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.


 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

மோடிக்கு சாதகமான கருத்துக்கணிப்புகளை வெளியிட்டு பித்தலாட்டம்: சொல்வது பாஜக எம்.பி.