நீங்கள் கொண்டாடும் நோபல் பரிசு பெற்ற பானர்ஜி யார் தெரியுமா? – குட்டு வைத்த குஜராத் எம்.எல்.ஏ!

Webdunia
திங்கள், 14 அக்டோபர் 2019 (18:20 IST)
பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு வாங்கிய அபிஜித் பானர்ஜி குறித்த ஒரு தகவலை தனது ட்விட்டரில் பதிவிட்டுள்ளார் குஜராத் எம்.எல்.ஏ ஒருவர்.

உலகம் முழுவதும் பல துறைகளில் சாதனை படைத்தவர்களுக்கான உச்ச அங்கீகாரமான நோபல் பரிசு தற்போது வழங்கப்பட்டு வருகிறது. இயற்பியல், வேதியியல், இலக்கியம் என பலதுறைகளுக்கு நோபல் பரிசு வழங்கப்படுள்ள நிலையில் இன்று பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு வழங்கப்பட்டுள்ளது.

பொருளாதாரத்திற்கான நோபல் பரிசை அமெரிக்க பொருளாதார நிபுணரான அபிஜித் பானர்ஜி மற்றும் அவரது மனைவி எஸ்தர் டூஃப்லா ஆகியோர் பெற்றுள்ளனர். இவர்களோடு மைக்கெல் க்ரீமர் என்பவரும் பொருளாதாரத்திற்கான நோபல் பரிசை பகிர்ந்து கொண்டுள்ளார். வருமையை ஒழிப்பதற்கான முன்னொடி திட்டங்களை வகுத்ததற்காக இந்த மூவருக்கும் நோபல் பரிசு வழங்கப்பட்டுள்ளது.

அபிஜித் பானர்ஜி கல்கத்தாவில் பிறந்து ஜவஹர்லால் நேரு பல்கலைகழகத்தில் பொருளாதாரத்தில் பட்டம் பெற்றவர். அவரது மனைவி எஸ்தர் டூஃப்லா அமெரிக்க பல்கலைகழகம் ஒன்றில் பொருளாதார பேராசிரியராக பணிபுரிந்து வருகிறார். இந்தியாவை சேர்ந்த அபிஜித் பானர்ஜி பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு பெற்றதை இந்தியா முழுவதும் கொண்டாடி வரும் வேளையில் அபிஜித் பற்றி கூறியுள்ள குஜராத் எம்.எல்.ஏ ஜிக்னேஷ் மெவானி “பக்தாள்கள் அபிஜித் பானர்ஜியை நோபல் பரிசு பெற்றதற்காக கொண்டாடி வருகிறார்கள். அவர் ஜவஹர்லால் பல்கலைகழகத்தின் பெருமைமிகு மாணவர் என்பதையும், பணமதிப்பிழப்பு, ஜி.எஸ்.டி மற்றும் வெறுப்பு குற்றங்கள் ஆகியவற்றை கடுமையாக விமர்சித்தவர் என்பதையும் மறந்துவிட வேண்டாம்” என கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

புதுவையில் விஜய் - என்ஆர் காங்கிரஸ் கூட்டணியா? உள்துறை அமைச்சர் சந்தேகம்..!

தவெகவில் இணைகிறாரா வைத்திலிங்கம்? தமிழக அரசியலில் பரபரப்பு..!

வாக்கு திருட்டு மிகப்பெரிய தேச துரோகம்! மக்களவையில் ராகுல் காந்தி ஆவேசம்

ஒரு நீதிபதியை பதவி நீக்கம் செய்ய 3ல் 2 பங்கு எம்பிக்கள் வேண்டும்.. இந்தியா கூட்டணிக்கு இருக்கிறதா?

திருப்பரங்குன்றம் தீபம்: தலைமைச் செயலாளர், ஏடிஜிபி டிச. 17ல் ஆஜராக உத்தரவு

அடுத்த கட்டுரையில்
Show comments